HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

தன்வினை தன்னைச் சுடும்!

♥தன்வினை தன்னைச் சுடும்!

♥உங்க மாமியாருக்கு எப்படி இருக்கு இப்போ?' என்று கேட்டாள் சீதா பாட்டி.
'கொஞ்சம் சீரியஸாகத்தான் இருக்கு. இன்னும் எட்டு மணி நேரம் சொல்லியிருக்கார் டாக்டர். அதுக்குள்ளே எதுவும் ஆகலாம். எதுக்கும் உங்க உறவுக்காரங்களுக்குத் தகவல் சொல்லிடுங்கன்னுட்டார். தேவைக்கப் பணம் எடுத்துப் போக வந்திருக்கேன்' என்றார் கிருஷ்ணன்.

♥'அப்படி ஏதாவது அசம்பாவிதம் ஆயிடுச்சுன்னா மேற்கொண்டு என்ன பண்ணுவீங்க?'
'உடலை இங்கு கொண்டு வர வேண்டியதுதான்.'

♥'இங்கே பாருங்க கிருஷ்ணன், உடலை கண்டிப்பாக இங்கு கொண்டு வரக்கூடாது. புரியுதா? ஆஸ்பத்திரியிலிருந்து நேரே மயானத்திற்குக் கொண்டு போயிடுங்க. அப்புறம் உங்க உறவுக்காரங்க எல்லாம் இங்கே வர்றது, அழறது, பத்தாம் நாள் காரியம் எல்லாம் ஒண்ணுமே இங்க கூடாது. நான் பூஜை, புனஸ்காரம் நிறைய வைச்சிருக்கேன். இந்த வீட்டிலே சாவுத் தீட்டு கலக்கக்கூடாது' என்று கறாராகச் சொன்னாள் சீதா பாட்டி.

♥'பாட்டி! பதினைஞ்சு வருஷமா நான் உங்க வீட்டில் குடியிருக்கேன். நீங்களே ஒருதரம் ஹாஸ்பிடல்லே அட்மிட் ஆனபோது நானும் என் மனைவியும்தான் ராப்பகலாக கண்விழிச்சு உங்களுக்கு உதவினோம். உங்களுக்குப் பூரண குணமான பிறகு டிஸ்சார்ஜ் ஆகி அழைச்சிட்டு வந்தோம். அப்போ உங்க பொண்ணு துபாய்லே இருந்தாங்க. இப்போ தானே உங்க பொண்ணு பக்கத்திலே குடிவந்திருக்காங்க. அது மட்டுமா? இந்த வீட்டை விரிவு பண்ணி கீழேயும், மேலேயும் கட்டின போதும் சரி, உங்க பெண் வீடு கட்டும் போதும் சரி, நான்தானே சாமான்களை எல்லாம் வாங்கிக் கொடுத்தேன். கட்டமான சாமான்கள், ராத்திரியில திருட்டுப் போகாமல் காவல் காத்திருக்கேனே. அதையெல்லாம் மறந்துட்டீங்களே பாட்டி' என்றார் கிருஷ்ணன்.

♥'இதோ பாருங்க! அதெல்லாம் பழைய கதை. அதற்கு ஈடாக நான் பல தடவை உங்களுக்குப் பணம் கொடுத்து உதவியிருக்கேன். பால், பழம், தயிர்னு கணக்குப் பார்க்காமல் செஞ்சுட்டேன். அது முடிஞ்சு போச்சு' என்றாள் வீட்டுக்காரப்பாட்டி.

♥பாட்டியும் குடியிருப்பவரும் உரக்கப் பேச, தெருவில் போகிறவர்கள், வருகிறவர்கள் அக்கம் பக்கத்தில் குடியிருக்கிறவர்கள் என சுமார் இருபது பேர்களுக்கு மேல் கூடி இந்தச் சண்டையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அதில் சிலர் வீட்டுக்காரப் பாட்டிக்குச் சாதகமாக 'சார், அவங்க சொல்றது நியாயம்தான். குடியிருக்கிறவங்க வீ்ட்டில் யாராவது இறந்து போனால், அந்த வீட்டிற்குக் கொண்டு வர அனுமதிக்க மாட்டாங்க. இது சென்னையிலே எழுதப்படாத ரூல், நீங்க வேறே மாற்று யோசனை பண்ணுங்க' என்று சொன்னார்கள்.

♥வேறு சிலர் குடியிருப்பவர்களுக்கு ஆதரவாக 'அதெப்படி முடியும்? இக்கட்டான நேரத்தில் இப்படி சொன்னால் எப்படி? அவர் எங்கே போவார்? சார்! நீங்க நேரா இங்கே கொண்டு வாங்க. என்ன செய்வாங்கன்னு ஒரு கை பார்க்கலாம்' என்று கூச்சலிட்டார்கள்.

♥கிருஷ்ணனுக்கோ மானம் போனது. டென்ஷன் வேறே. சீதாபாட்டி எதுக்கும் அசைந்து கொடுக்காமல் அடுத்த அஸ்திரம் போட்டார். 'நீங்க இப்போதே வீட்டைக் காலி செய்யுங்க' என்று கத்தினார்.
பொறுத்துப் பார்த்த கிருஷ்ணன், 'ஏன் பாட்டி! நீங்களே செத்துப் போனல் இந்த வீட்டில்தானே உங்களை வைப்பாங்க' என்று கேட்க, கூட்டத்தில் சிலர், 'அப்படிப் போடு அருவாளை, நீங்க கேட்டத்தில் தப்பில்லை சார்' என்றார்கள்.

♥அதைக் கேட்ட பாட்டி ஆக்ரோஷத்துடன் விறுவிறுவென்று தன் போர்ஷன், குடியிருப்பவர்கள் போர்ஷன் எல்லாவற்றையும் பூட்டி விட்டு, ஆட்டோவில் ஏற இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த தன் பெண் வீட்டிற்கு போய்விட்டார்.
அதிர்ச்சியில் உறைந்த கிருஷ்ணன் சிறிது நேரம் கன்னத்தில் கைவைத்தபடி நின்று விட்டு கவலையுடன் ஆஸ்பத்திரியை நோக்கி நடந்தார்.

♥டாக்டர் சொன்ன கெடு தாண்டி விட்டது. யார் செய்த புண்ணியமோ அல்லது அவரது மாமியார் சிவாலயங்களுக்குச் செய்து வந்த கைங்கர்யத்தின் பலனோ தெரியவில்லை. பிழைத்துக் கொண்டு விட்டார். உடலில், கை, கால்களில் அசைவ தோன்ற ஆரம்பித்தது.
டாக்டர் வந்து பார்த்தவிட்டு, 'மிராகிள், பேஷன்ட் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டார். ஆச்சர்யமாக இருக்கு. எல்லாம் கடவுள் அருள் தான்' என்று அங்கு மாட்டியிருந்த சாமி படத்தைப் பார்த்த கையெடுத்துக் கும்பிட்டார். இன்னும் மூன்று நாட்கள் கழித்து டிஸ்சார்ஜ் செய்யலாம் என்றார்.

♥மருத்துவமனையில் பார்க்க வந்த உறுவினர்களில் ஒருவர், வீட்டுக்காரப் பெண்மணி செய்த அலம்படலக் கேள்விப்பட்டு உடனே, 'நீ கவலைப்படவேண்டாம். நான் பைனுடன் தங்குவதற்காக ஸ்டேட்ஸுக்கு போகப் போறேன். என் வீடு காலியாகத்தான் இருக்கு. நாளைக்கு ஏர்போர்ட்டிற்குப் போகும்போது, வழியில் மருத்துவமனைக்கு வந்து வீட்டுச் சாவியைத் தர்றேன். நீங்க வாடகை கூட கொடுக்க வேண்டாம்' என்றார்.

♥நாளைக்கே வீட்டை காலி பண்ணி விடுவதைச் சொல்வதற்காக வீட்டுக்காரப் பாட்டியைச் சந்திக்க் சென்றார் கிருஷ்ணன்.
அவர் வீட்டருகில் சிலர் கூடியிருந்தார்கள். சிலர் வெளியே நின்றிரந்தார்கள். அடுத்த வீட்டில் வசிக்கும் ஒரு நண்பர் ஓடி வந்து, 'சார் உங்களுக்கு விஷயம் தெரியுமா? வீட்டைப் பூட்டிக் கொண்டு பெண் வீட்டுக்குப் போன சீதாப் பாட்டிக்கு ராத்திரியிலே ஹார்ட் அட்டாக் வந்திடுச்சாம். ஆஸ்பத்திரி போற வழியிலேயே உயிர் போயிடுச்சாம். அந்தப் பாட்டியோட மாப்பிள்ளை, சமீபத்தில்தான் புதிதாக வீடு கட்டி குடி ஏறியிருக்கறதனால, அந்த வீட்டுல சீதாப் பாட்டியின் உடலைக் கொண்டு வரக் கூடாதுன்னு கண்டிப்பாகச் சொல்லிட்டாராம். 'உங்க அம்மா நீண்ட காலம் வாழ்ந்த அந்த வீட்டுக்கே கொண்டு போயிடுவோம்னு' சொல்லி இங்கேயே எடுத்துட்டு வந்துட்டாங்க' என்று விளக்கமளித்தார் பக்கத்து வீட்டுக்காரர்.

♥கிருஷ்ணனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முதல் நாள் சீதாப்பாட்டியைப் பார்த்து தான் கேட்ட வார்த்தை இவ்வளவு சீக்கிரம் பலித்துவிடும் என்பதை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

- வெ. சியாமளா ரமணி, செகந்திராபாத்

Post a Comment

0 Comments