HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கர்ப்பிணிப் பெண்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை

♥#கர்ப்பிணிப் பெண்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை... 
♥பொதுவாக பெண்கள் தமது கற்பகாலத்தில் எவ்வாறான உணவு உட்கொள்ளவேண்டும் என்பதை தெரியாமல் சில உணவுகளை தவிர்த்து விடுகின்றார்கள். ஆகவே கர்ப்பிணிப் பெண்களுக்கான சில மருத்துவக் குறிப்புக்கள்.

♥கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மருந்து உட்கொண்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

♥கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

♥வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

♥பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

♥கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழைப்பழம் விதவிதமாக இருக்கும்.

♥கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு. தேவைக்கேற்ப குடிக்கலாம். 

♥கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

♥குழந்தைகளுக்கு #இரும்புசத்து..

♥குழந்தைகளுக்கு இரும்பு சத்து குறைபாடினால் மூளை வளர்ச்சி குறைவது, புரிந்து கொள்ளும் திறன் குறைவது போன்றவை ஏற்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். இதன் காரணமாகவே கர்ப்பமாக இருக்கும் போதே பெண்களுக்கு இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதே சமயம் அதிக அளவில் இரும்பு சத்து மாத்திரை உட்கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

♥கர்ப்பிணிப் பெண்களுக்கு சாதாரண பெண்களுக்கு தேவைப்படும் இரும்புச்சத்தை விட 50% அதிகம் தேவைப்படும். சாதாரணமாக பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு 9 மி.கி அளவு தேவை. ஆனால் கர்ப்பகாலத்தில் இதன் அளவு 27 மி.கி அளவு தேவைப்படுகிறது. தினசரி உணவில் 30 மி.கி இரும்பு சத்து கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்.

♥கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து அதிகம் தேவை என்பதால் மருந்து மாத்திரை அதிகம் எடுத்தால், அது வாயுவை அலர்ஜியுறச் செய்யும். மலச் சிக்கலை ஏற்படுத்தும். வாந்தி, வயிற்றுப் போக்கு, உடல் சோர்வு, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். சில சமயங்களில் கருவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உணவு மூலமே இரும்புச் சத்தினை பெற முயற்சிக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

#நச்சாகும்_இரும்புச்சத்து...

♥சிறு குழந்தைகளுக்கும் தேவைக்கதிகமாக இரும்புச் சத்து நிறைந்த மருந்து மாத்திரைகளைக் கொடுத்தால் அது உடலில் நச்சுப் பொருளாக மாறிவிடுகிறது. இதனால் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து கொடுக்கும் மருந்து மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது. உணவின் மூலம் கொடுப்பதே சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்.

#காய்கறிகள் #கீரைகள்...

♥சைவ உணவு உண்பவர்களை விட அசைவ உணவு உண்பவர்களுக்கு மிக அதிக அளவில் இரும்புச்சத்து கிடைக்கிறது. ஆனால் சைவ உணவில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்த கீரை வகைகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வது நல்லது.

♥முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, ஆரைக்கீரை, புதினா, குப்பைக் கீரை போன்றவற்றில் அதிகம் உள்ளது. அதுபோல் பழங்களில் பேரீச்சை, அத்திப்பழம் போன்றவற்றில் அதிகம் உள்ளது. மற்ற பழங்களிலும் ஓரளவு உள்ளது.முட்டை, மீன், ஆட்டு ஈரல் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது

#கருப்பு #திராட்சை...

♥கருப்புத் திராட்சையில் வைட்டமின் `ஏ' மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண் கருப்பு திராட்சை சாப்பிடுவது குழந்தைக்கும் நல்லது, அந்தத் தாய்க்கும் நல்லது. இப்பழத்தில் போலிக் அமிலமும் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு கருப்புத் திராட்சை குறித்த அச்சம் வேண்டாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

#குங்குமப்பூ...

♥கர்ப்பகாலத்தில் பாலில் குங்குமப்பூ சாப்பிடுவதால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது இதுவும் உண்மையில்லையாம். குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. கரு உருவாகும் பொழுதே குழந்தையின் நிறம் மற்றும் இதர பண்புகளுக்கு, ஜீன்களே முக்கிய காரணம்.அதேசமயம் கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. குங்குமப்பூவில் இரும்பு சத்து அதிகம் உள்ளது, அதனை கர்ப்பகாலத்தில் சாப்பிடுவது நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். உடல் வலுப்பெறும். ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள்.

♥மேலும் குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின்போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

♥நெல்லிக்காய், ரோஜா இத்ழ்கள், தேன், கல்கண்டு, சேர்த்து குல்கந்து செய்து சாப்பிட்டால் இரும்பு சத்து கிடைக்கும்.

♥குழந்தை வளர்ச்சிக்கும் மார்பக மற்றும் கர்ப்பப்பை விரிவடைய புரதச்சத்து மிகவும் ஆவசியம். ஆகையால் உணவில் அதிகமாக பால், முட்டை, சீஸ், பயறு சேர்க்கவும்.
இருப்புச்சத்து நிறைந்த மருத்துவர் கொடுக்கும் மாத்திரைகளை 5வது மாதத்தில் இருந்து எடுக்கவும்.

♥அதிகமாக பச்சை காய்கறிகள், பழங்கள் கீரைகள், ஈரல் சேர்க்கவும்.
நிறைய தண்ணீர் குடிக்கவும்.

♥அதிக காரமான உணவுகள், எண்ணெய் பண்டங்கள் அதிகம் சாப்பிட வேண்டாம்.
உணவுகள் அதிகம் சூடு இல்லாமல் சாப்பிடவும்.

மலசிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்லவும்.

♥மனச்சோர்வுடன் இருந்தால் உடலில் சுரக்கும் சில சுரப்பிகள் சரியாக செய்யல்படாமல் போய்விடும். இதனால் பிறக்கும் குழந்தைக்கு எடை கம்மியாக பிறக்க வாய்ப்பிருக்கு. ஆகையால் எப்போதும் கலகலப்பாக இருங்கள்.

♥தினசரி சிறிது நேரம் மருத்துவரின் ஆலோசனையின் படி உடற்பயிற்ச்சி செய்யவும்.
முடிந்த வரை நிறைய நேரம் ஓய்வெடுங்கள்.

♥வயிற்றை காய போடாமல் 2 மணினேரத்துக்கு ஒரு முறை சாப்பிடவும்.

Post a Comment

0 Comments