HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மாதவிடாய் சரியாக வராததற்கு காரணம்

♥மாதவிடாய் சரியாக வராததற்கு காரணம்

♥மாதவிடாய் 28- 30 நாட்களுக்குள் வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதென பொருள். மாதவிடாய் வரும்போது உங்களுக்கு உடல் அசதி, கால் வலி, தசை வலி வருகிறதே என கவலைப்படாதீர்கள்.

♥மாதவிடாய் சீராக வராமல் 25 நாட்களுக்கு ஒருமுறை வந்தாலோ, அல்லது கால தாமதமாக வந்தாலோ உங்கள் உடலில் ஏதேனும் பிரச்சனைகள் என்று அர்த்தம். ஏதாவது ஒரு தடவை வந்தால் அதற்கு பருவ கால மாற்றம் அல்லது வேற ஏதாவது பிரச்சனைகள் என்று சொல்லலாம். ஆனால் எப்போதும் இப்படி சீரற்ற மாதவிலக்கு வந்தால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நல்லது. உங்கள் சீரற்ற மாதவிடாய்க்கு கீழே சொல்பவைகளும் காரணமாக இருக்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.

♥அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி டயட் என இருக்கும்போது உடலில் கொலஸ்ட்ரால் அளவு மிகக் குறைவாக காணப்படும். கொலஸ்ட்ரால் பாலின ஹார்மோன்கள் சுரக்க இன்றியமையாதது. கொலஸ்ட்ரால் குறைவால் ஈஸ்ட்ரோஜன் சரியாக சுரக்காமல் போகும். இதனால் சீரற்ற மாதவிடாய் தோன்றலாம்.

♥தைராய்டு பிரச்சனை, மன வியாதிக்கு என எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் மாத விடாய் சுழற்சிக்கு இடையூறு விளைவிக்கும். மருந்துக்களின் வீரியமும் ஹார்மோன் மாற்றங்களுக்கு காரணமாகலாம்.

♥கொலஸ்ட்ரால் ஹார்மோன் உற்பத்திக்கு தேவைதான். ஆனால் அளவுக்கு அதிகமாக கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது, ஹார்மோன்களுக்கு இடையே சம நிலையற்ற நிலை உருவாகிவிடும். இதுவே மாதவிடாய் பிரச்சனைகளை உண்டு பண்ணும்.

♥மன அழுத்தம் தரக் கூடிய ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாகும்போது, அது பலப் பிரச்சனைகளை உண்டாகும். அதிலொன்று சீரற்ற மாதவிடாய். மன அழுத்தம் இனப்பருக்க மண்டலத்தை பாதிக்கும்.

♥போதிய தூக்கம் இல்லாமல் போனாலோ, அல்லது ஒழுங்கு முறையில்லாமல், தாமதமாக தூங்கச் செய்வது ஹார்மோனை பாதிக்கும். குறிப்பாக நைட் ஷிஃப்ட் முறையில் இரவில் வேலை செய்து, பகலில் தூங்குபவர்களுக்கு சீரற்ற மாதவிடாய் வருவது நடக்கிறது.

♥வயதாவதும் சீரற்ற மாதவிலக்கிற்கான ஒரு காரணம். மெனோபாஸ் நெருங்கும் சமயத்தில் சீரற்ற மாதவிலக்கு ஏற்படும். இது தவிர்க்க முடியாதது. ஆகவே பயப்படத் தேவையில்லை.

Post a Comment

0 Comments