HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கர்ப்பப்பை கட்டி (fibroids), மற்றும் என்டோமேட்ரியோசிஸ், மார்பக புற்றுநோய்-- ஏன் எதனால் எப்படி வருகிறது? தடுப்பது எப்படி?

♥கர்ப்பப்பை கட்டி (fibroids), மற்றும்  என்டோமேட்ரியோசிஸ், மார்பக புற்றுநோய்-- ஏன் எதனால் எப்படி வருகிறது? தடுப்பது எப்படி?

♥பெண்கள் மாதவிடாய் ஆகும் போது ஏற்படும் கழிவு சில சமயம் வெளியேறாமல், கர்ப்பப்பை, பல்லோப்பியன் குழாய், வயிற்றுப்பகுதி போன்ற இடங்களில் தங்கி விட்டால் என்டோமேட்ரியோசிஸ் எனும் பிரச்சினை வரலாம். அவை கர்ப்பப்பை செல்களை போலவே மகளிர் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜஸ்டிரோனுக்கு பணிந்து செயலாற்றும். அதனால் மாதவிடாய் முன்னும் பின்னும் வலி வரக் காரணமாகின்றன. இந்த என்டோமேட்ரியோசிஸ் திசு நம் உள்காயத்தை தூண்டி விடுகிறது மற்றும் இம்யூன் சிஸ்டத்தை தூண்டுகிறது. இதனாலேயே இவர்களுக்கு குழந்தை உருவாவதில்லை.

♥Fibroid எனப்படும் கர்ப்பப்பை கட்டியின் திசுக்கள், ஈஸ்ட்ரோஜனுக்கு கட்டுப்படும். அதிக ஈஸ்ட்ரோஜன் இருந்தால் பெரிதாகும்.

♥சில வகையான மார்பக புற்றுநோய்கள், ஈஸ்ட்ரோஜன் அதிகமானால் வளரக்கூடியவை 
அதிகமான ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை குறைத்து நார்மலாக்கினாலே என்டோமேட்ரியோசிஸ் வராமல் தடுக்கலாம், பைப்ராய்ட் பெரிதாவதை தடுக்கலாம், சில மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.  

♥அதிக ஈஸ்ட்ரோஜன் எப்படி உற்பத்தியாகிறது மற்றும் உற்பத்தியை தடுக்கும் வழிகள்:

♥1. அதிக இன்சுலின் அளவுகளை குறைத்தல்: மாவுச்சத்து (இட்லி, தோசை, சப்பாத்தி,சாதம் முதலியன) உணவுகள் இரத்தத்தில் க்ளுக்கோஸ் ஆக மாறும்--> இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும்--> இன்சுலின் ஆரோமடேஸ் (aromatase) என்சைமை தூண்டும்--> ஆரோமடேஸ் என்சைம், ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை தூண்டும். அதனால் உணவில் மாவுச்சத்தை குறைக்க வேண்டும் (பேலியோ) 

♥2. உடலில் கொழுப்பு  அதிகம் சேர்ந்தால்-->அடிப்போநெக்டின் ஹார்மோன் உற்பத்தி குறையும்--> இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும்--> ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்கும். அதனால் பேலியோ டயட் மூலம் வெயிட் மற்றும் இன்சுலின் அளவுகளை நார்மல் ஆக்க வேண்டும்

♥3. ரெகுலர் உணவுகள்--> குண்டாதல்--> கொழுப்பு செல்கள் PGE2 எனும் கெமிக்கலை உற்பத்தி செய்யும்--> PGE2 ஆரோமடேஸ் செயலை அதிகரிக்கும்--> அதிக ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி. அதனால் மாவுச்சத்து உணவுகளை தவிர்க்க வேண்டும்

♥4. மாவுச்சத்து உணவுகள் மூலம் மேலே சொன்னது போல ஈஸ்ட்ரோஜன் அளவுகளை அதிக்ப்படுத்தினாலே போதும்-->அதிக ஈஸ்ட்ரோஜன் அளவுகள்--> இன்ப்லமேஷன் எனும் உள்காயத்தை தூண்டும்--> உள்காயம் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை அதிகரிக்கும். இது ஒரு தொடர்கதை ஆகிவிடும்.  அதனால் மாவுச்சத்து உணவுகளை தவிர்க்க வேண்டும்

♥5. பிளாஸ்டிக் மற்றும் பூச்சிமருந்து பயன்பாடு ஈஸ்ட்ரோஜனை அதிகரிக்கும் 
அதிக ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றும் வழிகள்:

♥1. உடற்பயிற்சி - இன்சுலின் அளவுகளை குறைத்து நார்மலாக்கி ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை சீராக்க 

♥2. ஒமேகா 3 உணவுகள் அல்லது மாத்திரை-இன்ப்லமேஷன் எனும் உள்காயத்தை குறைக்க 

♥3. காலிபிளவர், புரோக்கொளி, முட்டைக்கோஸ்-ஈஸ்ட்ரோஜனை ஈரல் மூலம் வெளியேற்ற   

♥4. கெபிர் தயிர் அல்லது புளித்த காய்கறி (saurkraut, kimchi), கொம்பூச்சா- சிறுகுடல் கிருமிகளை மேம்படுத்தி ஈச்ட்ரோஜனை வெளியேற்ற  

♥5. கிரின் டி, பூண்டு மற்றும் உணவில் தேவையான புரதம் (பேலியோ)

♥6. பேலியோ டயட்- இன்சுலின் மற்றும் அடிப்போநெக்டின் வகையறாக்களை சரியான அளவில் வைக்க 

♥மேலே சொன்ன பிரச்சினைகள் வந்தவர்கள் டாக்டரின் மருந்துகளை எடுப்பதுடன் மேலே சொன்ன வழிமுறைகளை பின்பற்றினால் வியாதிகளின் தாக்கம் வெகுவாக குறையலாம்.

Post a Comment

0 Comments