♥கசப்பான உண்மை...
♥சமீபத்தில் ஊரில் வசிக்கும் தந்தை கொஞ்சம் ரூபாய் வேண்டுமென்று கேட்டிருந்தார்.! கொடுத்தேன்..!!
♥வாங்கியவர் சில நாட்கள் கழித்து என்னை சந்திக்கையில் தான் வாங்கியிருந்த பணத்திற்கான செலவு கணக்கை ஒரு துண்டு காகிதத்தில் எழுதி என்னிடம் காண்பித்தார்..!!
♥முதலில் எனக்கு புரியவில்லை என்றாலும் புரிந்து கொண்ட பின் மனதிற்கு என்னவோ போலிருந்தது..!!
♥இனிமேல் இது போல் எழுதி கணக்கு காமிக்க வேண்டாமென்று சொல்லி வந்தேன்..!!
♥தந்தை சம்பாதித்ததை செலவு செய்வதில் மகனுக்கு இருக்கும் சுதந்திரம் மகன் சம்பாதித்ததை செலவு செய்யும் உரிமை எந்த தந்தைக்கும் இருப்பதில்லை என்பதை உணர்கையில் எனது மகனை நான் நினைத்து கொண்டேன்...!!
'வாழ்க்கை சக்கரம்' சுழலுது..!!
0 Comments
Thank you