குமரி மாவட்டத்தில் சிறப்புமிக்க
அழகிய கடற்கரையாக நிகழ்வது "லெமூர் கடற்கரை". உண்மையில் இந்த கடற்கரைக்கு வரும் மக்கள் மனநிம்மதி பெற்று செல்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு மன அமைதி தரும் கடற்கரை.
கன்னியாகுமரியில் இருந்து 32 கிமீ தொலைவிலும்,நாகர்கோவிலில் இருந்து 14 கிமீ தொலைவிலும்
அமைந்துள்ளது "லெமூர் கடற்கரை".
நாகர்கோவிலில் இருந்து குளச்சல் செல்லும் சாலையில் இராஜக்கமங்கலம் பகுதியை அடுத்த
கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ளது.
கணபதிபுரம் ஜங்ஷனில் இருந்து தெற்கே செல்லும் சாலையில் ஏறத்தாழ ஒரு கிமீ தொலையில் சென்றால், லெமூர் கடற்கரையை அடையலாம்.
செல்லும் வழி இருபுறமும் தென்னைமரங்கள் உங்களை வரவேற்று செல்லும் காட்சியை அழகாக
ரசிக்கலாம். கடற்கரையை வாகனம் அடையும்போது, அங்கே அமைக்கப்பட்டுள்ள அலங்கார நுழைவுவாயினை காணும் நேரம், நீங்கள் ஒரு பிரமிப்பை
அடைவீர்கள். ஏனெனில், அந்த அளவுக்கு மத்திய அரசு அழகிய வேலைப்பாடுகளுடன் கடற்கரையை
அழகுபடுத்தி உள்ளது. நுழைவாயில் உள்ள சென்றால் வலது பக்கம் உள்ள
கோவிலில் தரிசனம் பண்ணலாம். அலங்கார வண்ண கற்களும், மார்பிள் இருக்கைகளும் உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
குமரி மாவட்டத்தின் நீண்ட, அகலமான
கடற்கரையாக "லெமூர் கடற்கரை" உள்ளது. கடற்கரையில் அமர்ந்து கடல் அலையை ரசிக்கும் போது, உங்கள் உள்ளத்திற்குள் ஒரு பரவசநிலை ஏற்படுவதை உணரலாம். மன அமைதி, புதிய இடங்களை தேடி செல்பவர்கள்
மட்டுமல்லாது, அனைத்து மக்களும் சென்றுவர, மனதை கொள்ளைகொள்ளும் அழகிய, சுத்தமான கடற்கரை "லெமூர் கடற்கரை". இந்த கடற்கரைக்கு
"ஆயிரம்கால் பொழிமுகம்" என்ற மற்றொரு பெயரும் உண்டு.
0 Comments
Thank you