மனைவியின் அருமை
♥அவள் என்னுடைய அம்மாவுடன் மருத்துவமனையில்
♥திருமணமான சில மாதங்கள் கழித்து, என்னுடைய அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. கட்டாயமாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய சூழலில் தள்ளப்பட்டார். எனது அப்பாவும் மிகவும் வயசானவர். எனது மனைவி நான் உங்கள் அம்மாவைப் பார்த்துக் கொள்கிறேன் நான் அவருடன் மருத்துவமனையில் தங்கிக் கொள்கிறேன் என்று கூறினார். கூறியது மட்டுமல்லாமல் அதை நிகழ்த்திக் காட்டினார்.
♥என் மனைவி எனது அம்மாவுடன் 2 வாரங்கள் மருத்துவமனையிலேயே தங்கினார் கூடவே இருந்து கொண்டு அனைத்து பணிகளையும் மேற்கொண்டார்.
தனது அம்மாவைப் போல் அன்பும் அரவணைப்பும் பார்த்துக்கொண்டாள். மிகவும் கஷ்டமான சூழலிலும் பணிவாகவும் அன்புடனும் நடந்து கொண்டாள்.அவளுடைய அந்த கனிவும் அன்பும் எங்கள் குடும்பத்தில் அனைவரையும் ஈர்த்தது.
♥கடைசிவரை மருத்துவரின் ஆலோசனைப்படி தெளிவாக நடந்துகொண்டார். இதே நிலைமை என் திருமணத்திற்குமுன் ஏற்பட்டு இருந்தால் நான் எப்படிச் சமாளித்து இருப்பேன் என்றே தெரியாது.
♥என் மனைவி அதை மிகவும் சாமர்த்தியமாகக் கையாண்டார்.
மிகப்பெரிய அசாதாரணமான சூழ்நிலையிலும் அவளின் அந்த செயலானது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
♥ஒரு வாழ்க்கைத் துணையின் முக்கியத்துவத்தை நான் அன்று தான் புரிந்து கொண்டேன். அன்றைய நாள் முதல் அவள் மீது உள்ள அன்பும் மரியாதையும் பல மடங்கு உயர்ந்தது
0 Comments
Thank you