ஆண்களுக்கும் கற்பு உண்டு
அவர்கள் காதலித்துக் கொண்டு காதலி இல்லையென்று கூற மாட்டார்கள்
ஊர் உலகத்தின் முன் யாரோ போன்று வாழ்ந்து காட்ட மாட்டார்கள்
பெண்களை போகப் பொருளாக நினைக்க மாட்டார்கள்
ஒரே நேரத்தில் பல பெண்களுக்கு வலை விரிக்க மாட்டார்கள்
காதல் என்ற பெயரை பயன்படுத்தி காரியத்தை சாதிக்க மாட்டார்கள்
புனிதம் என்று பெயர் சொல்லி உறவிற்கு அழைக்க மாட்டார்கள்
கற்பை அழித்துவிட்டு அவள் களங்கமானவள் என்று உரைக்க மாட்டார்கள்
தேவை தீர்ந்தபின் தேவையில்லை என்று விலக மாட்டார்கள்
தான் விட்டுப் போய்விட்டு விட்டுப் போனாய் ஏனோ என்று பாட மாட்டார்கள்
வாழ்த்துப்பா கூறி தியாகி வேடம் போட மாட்டார்கள்
இதே நடிப்பை அடுத்தவளிடம் காட்ட மாட்டார்கள்
இதை வைத்தே அவளையும் மடக்க மாட்டார்கள்
இக் கதையை மீண்டும் தொடர மாட்டார்கள்
இதுதான் வாழ்வென்று நினைத்து வாழ மாட்டார்கள்
இப்படியாக கற்பு நெறி பிறழாத ஆண்களுக்கு கலங்கமில்லாத பெண்கள் சார்பில் இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்
தோழி கவிதாயினி
0 Comments
Thank you