ஒருவர் புதிதாக ஒரு வீடு கட்டினார்.வீட்டுக் கதவு ஜன்னல் செய்ய பலகைக்கு வீட்டின் முன் நிற்கும் பெரிய வேப்ப மரத்தை வெட்ட முடிவு செய்தார். அந்த மரத்தில் ஒரு காகம் கூடுகட்டி குஞ்சுகளோடு வாழ்ந்து வந்தது.
மரத்தருகே அப்பாவும் மகனும் வந்தனர்."கதவு ஜன்னலுக்கு இந்த மரத்தைத் தான் வெட்ட போகிறோம்" என்றார் அப்பா. "யாரப்பா வெட்டுவார்கள்?"என்று மகன் கேட்டான்.
"நம் உறவுக்காரர்களை வரச் சொல்லி இருக்கிறேன்" என்றார் அப்பா.
காக்கைக் குஞ்சுகள் பயந்தன. தாய்க்காகமோ எந்தவித பதற்றமும் காட்டவில்லை. அடுத்தநாள் உறவுக்காரர்கள் யாரும் வரவில்லை. மகன் அப்பாவிடம் கேட்டான்"ஏனப்பா யாரும் வரவில்லை?"
"உறவுக்காரர்கள் ஏமாற்றிவிட்டார்கள். நாளை நண்பர்களை வரச் சொல்லியிருக்கிறேன்" என்றார் அப்பா.
அப்போதும் தாய்க்குப் பதறவில்லை.
"ஏனப்பா உங்கள் நண்பர்களும் ஏமாற்றிவிட்டார்கள். இன்றும் யாரும் வரவில்லை"என்று மகன் கேட்டான். அப்பா சொன்னார் "நாளை நாமே மரத்தை வெட்டி விடுவோம்"
காக்கைக் குஞ்சுகள் அம்மாவிடம் சிரிப்போடு கூறின."சும்மா பேசிக்கிட்டு இருக்கறதே இவங்க வேலையாப் போச்சு!"
ஆனால் இதனை ரசிக்கும் மனநிலையில் இல்லாத தாய்க்காகம் பதற்றத்துடன் கூறியது"இல்லை குழந்தைகளே! வாழ்வதற்கு வேறு இடம் தேட வேண்டிய நெருக்கடி இன்றே வந்துவிட்டது.."
"ஏனம்மா இப்போது மட்டும் படபடப்பு ஆகிவிட்டாய்?"என்று புரியாமல் கேட்டன குஞ்சுகள்.
"இப்போது அவர்கள் தங்களை நம்பி காரியத்தில் இறங்க முடிவு செய்துவிட்டனர். நாளை எப்படியும் மரத்தை விட்டு விடுவார்கள்" என்றது தாய்க்காகம்.
தன்னை நம்பி களத்தில் இறங்கும் யாரும் வெற்றி இலக்கை அடைந்தே தீருவார்கள். அதனை இந்த உலகத்தில் யாராலும் தடுக்க முடியாது!
0 Comments
Thank you