HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

காதலர் தினம் என்றால் என்ன?

காதலர் தினம் என்றால் என்ன?

இன்று உலகம் எங்கிலும் காதலர் தினம் என்பதாக கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் எங்கிலும் இந்த நாளை, வாலண் டினா தினம் என்பதாக அழைப்பார்கள். 

வாலண்டினா என்பது ஒரு கிறித்துவ ஆண் பாதிரியாரின் பெயர். இந்த நாளின் சாராம்சம் காதலைப் போற்றுவது என்பதாகும். அதை சுருக்கமாக நம்மவர்கள் காதலர் தினம் என அழைத்துக் கொள்கிறார்கள். 

அதைக் கேள்விப்பட்ட இளைஞர்கள், தாங்கள் சுதந்திரமாக எதையும் செய்வதற்கு அனுமதிக்கும் தினம் என்று எடுத்துக் கொள்கிறார்கள். 

அதனாலேயே நமது நாட்டின் பண்பாடு சீரழிந்து விடுகிறது என்ற கண்டுபிடிப்பின் அடிப்படையில், சிலர் இந்த தினத்தை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள். கையில் தாலியை வைத் துக்கொண்டு சிலர் இந்துத்துவாவாதிகள், யாராவது இளைஞர்களாக இருக்கும் ஆண்களும், பெண்களும் ஒன்றாக பேசிக் கொண்டிருந்தாலே, அவர்களை நிர்ப்பந்தப்படுத்தி அந்த தாலியைக் கட்டச்சொல்லலாம் என்று அலைகிறார்கள். இது தேவையில்லாத பிரச்சினையை உருவாக்கும் என்று அறிந்ததனால், காவல்துறை அதிகாரிகள் காதலர்களை நிர்ப்பந்தப்படுத்தும் வன்முறை சக்தி களுக்கு எச்சரிக்கை கொடுக்கிறார்கள். மதவாத சக்திகள் நடத்தக்கூடிய ஆர்ப்பாட் டங்களும், போராட்டங்களும், மேற்கத்திய நாட்டிலிருந்து இறக்குமதியான பண்பாடு என்று இந்த தினத்தை வர்ணிக்கிறது. 

மேற்கத்திய நாட்டிலிருந்து இறக்குமதியான பண்பாட்டில் ஒரு அங்கமான, ஆங்கில நாட்காட்டி கூறும் தேதியைக் குறிப்பிட்டு, தங்களது போராட்டத்தை அவர்கள் அறிவித்துக்கொள்கிறார்கள். 

மேற்கத்திய பண்பாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட, பேண்ட், சட்டையை போட்டுக் கொண்டு, பல மதவாத சக்திகளும் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட போராட் டங்களின் மூலம் அவர்கள் இந்தியாவின் நாட்டுப்பற்று உணர்வை வளர்க்க முடியும் என்றால், மகிழ்ச்சியான செய்தியாக அது இருக்கும். 

இந்து மதத்தின் கடவுளர்களாக அழைக்கப்படும் ஒவ்வொரு தெய்வமும், காதல் செய்துதான் திருமணம் செய்ததாக, நமக்கு இவர்கள் தான் புராணக்கதையை அன்று கூறினார்கள். 

இந்து மத கோயில் களுக்குச் சென்றால், அங்கு சிலை வடிவில் நிற்கின்ற சிற்பங்கள் எல்லாம், ஆண், பெண் என்பதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த சிற்பங்களும் காதல் செய்வதை நாம் கலை வடிவம் என ரசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். 

மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதையும், பாசம் கொள்வதையும் காதல் என்ற பரந்த வார்த்தையில் புரிந்து கொள்ள, இவர்க ளாலும் முடியவில்லை. 

தமிழ்நாட்டில் முற்போக்கான கருத்துக் களுக்கு, பகுத்தறிவு சிந்தனைகளுக்கு, பகலவனாக நிற்கின்ற தந்தை பெரியார் காதலை வரவேற்றுள்ளார். அவர் கூறும் போது, காதலை வரவேற்போம்! அந்தக் காதல், உணர்ச்சிகளால் மட்டுமே, உரு வாகிவிடாது, அறிவார்ந்த காதலாக வேண்டும்.

காதலை அவரவர் உள்ளத்திற்கே விட்டுவிடுவோம். ஆனால் வாழ்க்கைத் துணை விசயத்தில் காதல் போதாது. அறிவு, அன்பு, அனுபவம், பொருத்தம் ஆகிய பல காரியங்களே முக்கியமான தாகும். பழங்காலத்தில் காதலே போது மானதாக இருந்திருக்கலாம். 

அப் போதைய அறிவுக்கு அவ்வளவுதான் தேவையாக இருந்திருக்கும். இப்போதைய அறிவுத்திருமணம் வாழ்நாள் முழுதும் பொருந்தும் படியாக இருக்க வேண்டும். மனித வாழ்வையும் பிறவிக் குணங் களையும் மேன்மைப் படுத்துவதாக இருக்கவேண்டும்.

மேற்கண்ட கருத்துக்களை தந்தை பெரியார் நமக்கு தந்துள்ளார். 

அதே போல மக்கள் கவிஞர் இன்குலாப் கீழ்க் கண்டவாறு காதல் பற்றிக் கூறுகிறார்.
காதல் பற்றின் காரணமாக ஆக்கிரமிக்கத் தூண்டுவது அல்ல;  அன்பில் அடிப்படையில் அரவணைக்கத் தூண்டுவது.

குடும்பம் என்ற குறுகிய வட்டத்தில் தேங்குவது அல்ல;
சமுதாயம் என்ற பெருவெளியில் பிரகாசிப்பது.

உடல் உறவு அதற்கொரு தொடக்கம்;
மனிதநேயம் அதன் சிகரம்;
ஆதலினால் காதல் செய்வீர்,
உலகத்தீரே
என்பதாக கவிதை வரிகளில் இன்குலாப் கூறியுள்ளார். 

இவ்வாறு தமிழர்களுக்கு வழிகாட்டியான தந்தை பெரியாரும், தமிழ் இலக்கியங்களும் தமிழ் பண்பாட்டின் பாரம்பரியத்தை பதிவு செய்துள்ளார்கள். உடன்போதல் என்ற முறை தமிழர்களின் மரபு வழியாக இருந்ததைக் கூட, சில தமிழ் இலக்கியவாதிகள் எடுத்துக் காட்டுகிறார்கள். 

எது எப்படி இருந்தாலும், இன்று கடைபிடிக்கப்படும் காதலர் தினம் என்பது, கட்டுப்பாடற்ற பண்பாட்டை போதிப்பதற்காக அல்ல. 

அதே சமயம் மாற்றார் மீது அன்பு செலுத்துவதை அங்கீகரிக்கின்ற தினம். அதனால் தான் இந்த நாளினுடைய வரலாற்றை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. 

வாலாண்டினா தினம் என்று அழைக் கப்படுகின்ற இந்த காதலர் தினம், கி.பி. 496ம் ஆண்டு ஜெலாசியஸ் என்ற போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்டது. அப்போது கிறித்துவ தியாகிகளை வாலண்டினா என்று அழைத்தார்கள். 

காதலர்கள் தங்களுக்குள் மலர்களை அளித்துக் கொண்டும், வாழ்த்து அட்டைகளை அனுப்பிக் கொண்டும் இந்த நாளை மகிழ்ச்சியாக கடைபிடித்து வந்தார்கள். 

இன்றைய நவீன வாலாண்டினா நாள் என்பது இதய வடிவத்தை படமாகப் போட்டு, வாத்துக்களின் படங்க ளைக் காட்டி பரப்பப்படுகிறது. 19ம் நூற்றாண்டிற்கு பிறகு கையால் எழுதப் பட்ட வாலண்டினா வாழ்த்துக்கள், காலப்போக்கில் வாழ்த்து அட்டைகளாக மாறத் தொடங்கின. 

அமெரிக்காவில் இன்று அதிகமான அளவில் வாழ்த்து அட்டைகள் பரிமாறப்படுகின்றன. இந்த நாளை விடுமுறை நாளாகவும் கடைபிடிக் கிறார்கள். 

கிறித்துவ தியாகிகளை வாலண்டினா என்று அழைத்து வந்த வரலாற்றில், ரோம் நாட்டு வாலண்டினா என்பதுதான் இந்த தினத்தின் வரலாற்றைக் குறிக்கிறது. பாதிரியார் வாலண்டினா என்ற பெயர் பல்வேறு கிறித்துவ தியாகிகளின் பட்டியல்களில் தென்படுகிறது. 

ஆனாலும் ரோம் நகரைச் சேர்ந்த ஒரு பாதிரியார் பெயர்தான் இந்த தினத்தையொட்டி பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கிளாடியஸ் கோத்திகஸ் என்ற இரண் டாவது கிளாடியஸ் மன்னர் ஆட்சியில், மேலே குறிப்பிட்ட பாதிரியாரான புனித வாலண்டினா, மரண தண்டனை விதிக்கப் படுகிறார். 

கிறித்துவ தம்பதியர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததை, குற்றம் என்று அன்றைய மன்னர் ஆட்சி அறிவித்து, புனித வாலண்டினா என்ற அந்த கிறித்துவ பாதிரியாரை கைது செய்தது. சிறையில் தள்ளியது. 

கிறித்துவர்களுக்கு உதவி செய்ததாக அந்த நேரத்தில் ரோம் நகரில் கிளாடிய சால் அவர் குற்றம் சாட்டப்பட்டார். அந்த காலத்தில் கிறித்துவர்களுக்கு உதவி செய்வது என்பது ஒரு குற்றம் என்பதாக கருதப்பட்டது. 

அந்தப் பாதிரியாரை கேடயங்களால் அடித்தும், கல்லால் எறிந்தும் கொலை செய்யமுடியவில்லை. 

அதன் பிறகு பிளாமினியன் வாசல் என்று சொல்லப்படும் இடத்திற்கு வெளியே, காதலை உற்சாகப்படுத்திய அந்த பாதிரியார் புனித வாலண்டினாவை, தலையை வெட்டி மரணதண்டனையை நிறைவேற்றினார்கள். 

அப்படி மரண தண்
டனை நிறைவேற்றப்பட்ட காலத்தைப் பற்றி பல்வேறு விதமான புள்ளிவிவரங்கள் சொல்லப்படுகின்றன. 

அது கி.பி. 269 என்றும், 270 என்றும் அல்லது 273 என்றும் கூறப்படுகிறது. அதிகாரபூர்வமான ரோமன் நாட்டு தியாகிகள் பட்டியல், பிப்.14ந் தேதியை குறிப்பிடும் போது, ஒரே ஒரு புனித வாலண் டினாவைத்தான் குறிப்பிடுகிறது. 
கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரபூர்வமான பட்டியலில் 7 தியாகிகள் குறிக்கப்பட்டுள்ளார்கள். 

அவர்கள் பல்வேறு ஆண்டுகளில் தியாகிகளானவர்கள் என்பதாக அந்த பட்டியல் கூறுகிறது. 

ஆனாலும் இந்த நாளில் குறிப்பிடப்படும் வாலண்டினா என்ற பாதிரியாரின் செயல்தான் முக்கிய மானது. அதாவது அவர் காதலுக்காக தன்னுயிரையே அர்ப்பணித்தார் என்பது தான், இந்த நாளின் சிறப்பு. 

ஆண், பெண் மத்தியிலான அன்பு என்பதை, காதலாக மலர்வதை தடுக்கின்ற சாதி என்ற புற்று நோயும், மதம் என்னும் கொடிய நோயும் புரண்டு கொண்டிருக்கின்ற நமது மண்ணில், இந்த நாளை கொண்டாடுவதன் மூலம், அன்பை உயர்த்திப் பிடிக்கும் பண்பை வளர்த்துக் கொள்வோம்.

Post a Comment

0 Comments