HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கர்ப்பிணி பெண்கள் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்?கருவுற்றிருக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...!!

♥கர்ப்பிணி பெண்கள் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்?
கருவுற்றிருக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...!!

♥கருவுற்றிருக்கும் பெண்கள் அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவது ஆபத்தானது. அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவதால் கருச்சிதைவு மற்றும் கர்ப்பப்பை கீழிறங்கும் அபாயம் உள்ளது. இதனை கவனத்தில் கொள்வது அவசியம்.

♥ஆரம்ப கர்ப்பசிதைவை தடுக்க அத்திபழம், தேன் சிறிதளவு உப்பு சேர்த்து உட்கொண்டால் கர்ப்பசிதைவை தடுக்கலாம். 

♥. ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதம் சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும். 

♥கருவுற்றிருக்கும் பெண்கள் அதிக இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். தினமும் சிறிதளவு நடைப்பயிற்சி, நல்ல இசை, ஊட்டச்சத்துள்ள உணவு வகைகள் முதலியவற்றை எடுத்து கொள்ளுதல் அவசியம்.

♥கருவுற்றிருக்கும் பெண்கள் எள் உருண்டை, அன்னாசிப்பழம், பப்பாளிப்பழம், கருஞ்சீரகம், வெல்லம் போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிக வெப்பம் தரும் பொருட்களை உண்பதால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவ்வாறு கூறப்படுகிறது. மருத்துவரின் ஆலோசனையின்படி கேட்டு நடப்பது அவசியம்.

♥கருவுற்றிருக்கும் காலத்தில் வாந்தி ஏற்படுவதுண்டு, அவற்றை தடுக்க, லவங்க பொடியை நீரில் கலந்து அரைமணி நேரம் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் ஏற்படும் வாந்தி வராது. இதனால் உணவு உண்பதற்கு ஏதுவாகும்.

♥கர்ப்பிணி பெண்கள் தினசரி இரண்டு நெல்லிக்காய் சாப்பிட வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கு டானிக்காக பயன்படுகிறது. மேலும் தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். 

♥கர்ப்பிணி பெண்கள் நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் சேர்த்து வந்தால் கைகால் வீக்கம் வராமல் பார்த்து கொள்ள முடியும். இதனுடன் கருவுற்ற தாய்மார்கள் சாப்பிட சிறந்த பழம் மாம்பழம். இதனால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக காணப்படும்.

Post a Comment

0 Comments