#திருமணம் எனும் காரணத்துக்காக முன்ன பின்ன தெரியாத ஒருத்தனுக்கு தாலி கட்டும் போது கழுத்தையும் கொடுத்து அவனுக்கு தன்னோட உடம்பையும் கொடுத்து ஒரு குழந்தையும் பெத்து கொடுத்து
காலைல சீக்கிரம் எந்திரிச்சி
கோலம் போட்டு புருஷன எழுப்பி விட்டு சோறு வடிச்சி காய்கறி நறுக்கி கொழம்பு வெச்சி பிள்ளைங்கள பள்ளிக்கு அனுப்பி
புருஷன ஆபிஸ் அனுப்பிட்டு...
அதுக்கு அப்பறம் அவசர அவசரமா சாப்பிட்டு இரு சக்கர வாகனத்துலயோ பேருந்துலயோ ஆபிஸ் போய்ட்டு அங்க இருக்க எல்லா பிரச்சனையும் சமாளிச்சி வேலை செஞ்சி அவசர அவசரமா வீட்டுக்கு வந்து மாடில காய வெச்ச வத்தலோ மிளகாயோ அத எடுத்து வெச்சிட்டு இரவு சாப்பாட்டுக்கு
எல்லாத்தையும் ரெடி பண்ணி குழந்தைக்கு பாடம் சொல்லி கொடுத்து சாப்ட வெச்சி தூங்க வெச்சிட்டு மாமனார்க்கு மாத்திர போட சுடு தண்ணி வெச்சி கொடுத்து
புருஷனுக்கு பால் சுட வெச்சி கொடுத்துட்டு எல்லாரும் தூங்க வெச்சிட்டு பாத்திரம் எல்லாம் கழுவி வெச்சிட்டு அப்பறம் தூங்கி காலைல மொதல் ஆளா எந்திரிக்க பொண்ணுங்க இன்னும் நம்ம நாட்ல இருக்க தான் செய்றாங்க....
எந்த ஒரு ஆணுமே தன்னோட வாழ்க்லை நாம ஏன் ஆணோ பொறந்தோம்னு யோசிச்சதே கிடையாது...
ஆனா எல்லா பொண்ணுங்களுமே மாசத்துக்கு மூன்று நாள் நாம ஏன்டா பொண்ணா பொறந்தோம்னு
யோசிப்பாங்க....
14 வயசுக்கு அப்றம் ஒவ்வொரு பொண்ணும் மனசளவிலும்
உடம்பளவிலும் அவங்க அனுபவிக்குற வலியையும் வேதனையையும் வார்த்தைகளால சொல்லவே முடியாது....
மூனு நாளு தீட்டுன சொல்லி அவங்கள ஒதுக்கி வெக்காம அவங்ளுக்கு உறுதுனையாவும் ஆதரவாகவும் இருக்கறது தான் ஒரு ஆம்பளைக்கு அழகு...
எல்லா ஆணும் தன்னோட மனைவியையும் குழ்தையையும் தன் நெஞ்சில சுமக்குறானானு தெரியாது...
ஆனா எல்லா பொண்ணுங்களும் தன்னோட குழந்தைய வயித்துல சுமந்து அந்த வலியை அனுபவிச்சே ஆகனும்...
நடந்த போயி வேண்டிக்கிட்டு கோவில்ல இருக்க எத்தனையோ பெண் தெய்வங்கள கும்பிட்டு
வறோம்...
ஏனோ வீட்ல இருக்க பெண்களை வணங்க மறுக்குறோம்....
ஆண்களுக்குனு தனித்துவம்னு
ஏதும் பெருசா கெடையாது...
ஆனா பெண்களுக்கு நிறைய தனித்துவம் இருக்கு....
ஆண்கள் செய்யகூடிய எல்லா வேலையையும் ஒரு பெண்ணால் செய்ய முடியும்...
ஆனால் எத்தன யுகம் ஆனாலும் ஒரு ஆணால குழந்தைய பெத்தெடுக்க முடியாது....
ஒரு பூவ பாக்குறோம் ரசிக்குறோம்....
அந்த பூ எனக்கு தான் வேனும் இல்லனா அந்த பூ மேல ஆசிட் அடிக்குறேனு சொல்றது ரொம்ப தப்பு தலைவா.....
ஒரு தாயாகவும்,
மனைவியாகவும்,
அக்காவாகவும்,
தங்கையாகவும்...
நம்மை போன்ற எல்லா பெண்களும் பெருமைக்குரியவர்கள்தான்....!
0 Comments
Thank you