♥உங்கள் கையில் எப்போதும் பணம் புரள வேண்டுமா? இதை செய்து பாருங்கள்...!!
♥ இன்றைய வாழ்வில் மனிதருக்கு முக்கிய தேவை பணம் மட்டுமே. பணம் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வதென்பது அரிது.
♥ செல்வத்தை அள்ளித்தருவதில் மகாலட்சுமிக்கு ஈடு இணை இல்லை என்றுதான் கூறுவார்கள் நம் முன்னோர்கள்.
♥நமது முன்னோர்கள் கூறிய தாந்த்ரீக பரிகார முறைகள் பல உள்ளன.
♥ இதனை நம்பிக்கையுடன் கடைபிடிப்பதால் மிகப்பெரிய அளவில் செல்வந்தர்கள் ஆகாவிட்டாலும், தற்போது இருக்கின்ற பொருளாதார கஷ்டங்கள் நீங்கி வாழ்க்கையை சுலபமாக நடத்துவதற்கான செல்வத்தை பெற முடியும்.
♥தற்போது உங்கள் கையில் எப்போதும் பணம் புரள கீழே குறிப்பிடப்பட்டுள்ள பரிகாரத்தை எப்படி செய்யலாம்?... என பார்ப்போம்.
#பரிகாரமுறை :
♥புதன்கிழமை அன்று ஐந்து வெற்றிலைகளை வாங்கிக் கொள்ள வேண்டும்.
♥அந்த வெற்றிலைகள் அனைத்தும் காம்புகளுடன் இருக்க வேண்டும். வெற்றிலையின் கீழ்நுனிப்பகுதி கூர்மையாக இருப்பது அவசியமாகும்.
♥புதன்கிழமை அன்று மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள்ளாக உங்கள் பூஜை அறையில் வடக்கு திசையை நோக்கி அமர்ந்தவாறு, அந்த ஐந்து வெற்றிலைகளிலும் சிறிது அளவு பசு நெய்யினை நன்றாக இலைகள் முழுவதும் தடவ வேண்டும்.
♥பிறகு அந்த வெற்றிலைகளை ஒன்றன் மீது ஒன்றாக வைத்துக்கொள்ள வேண்டும்.
♥ஒரு கைக்குட்டை அளவிலான தூய்மையான பட்டுத்துணியை முன்னதாகவே வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.
♥அந்த பட்டுத்துணியில் இந்த ஐந்து வெற்றிலைகளையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, இந்த வெற்றிலைகள் முழுவதும் மறைக்குமாறு நான்கு புறமும் நன்றாக மூடி, ஒரு சிகப்பு நிற நூல் கொண்டு வெற்றிலை முடிந்திருக்கும் பட்டுத்துணி மடிப்பை கட்டி முடிந்து கொள்ள வேண்டும்.
♥இதன் பிறகு இந்த வெற்றிலைகள் அடங்கிய பட்டுத்துணி மடிப்பை உங்கள் வீட்டில் பணம் வைக்கும் அலமாரியில் வைக்க வேண்டும். (அல்லது) உங்கள் தொழில், வியாபாரங்கள் நடைபெறும் இடங்களில் இருக்கும் பணப்பெட்டியில் வைக்க வேண்டும்.
♥உங்கள் வீட்டில் எப்போதும் பணப் பற்றாக்குறை ஏற்படாமல் காக்க மறக்காமல் இந்த பரிகாரத்தை செய்து செல்வ செழிப்புடன் வாழுங்கள்.
0 Comments
Thank you