♥''நான் ஒருபெண் ஒரு நாளின் 24 மணி நேரங்களும் பணியாற்றுகிறேன்.
♥நான் ஒரு மகள்
நான் ஒரு மனைவி
நான் ஒரு மருமகள்
நான் ஒரு தாய்
நான் ஒரு அலாரம்
நான் ஒரு சமையல்காரி
நான் ஒரு வேலைக்காரி
நான் ஒரு ஆசிரியர்
நான் ஒரு செவிலியர்
நான் ஒரு பணியாளர்
நான் ஒரு ஆயா
நான் ஒரு பாதுகாவலர்
நான் ஒரு ஆலோசகர்
நான் ஒரு நலன் விரும்பி
எனக்கு விடுமுறைகள் கிடையாது.
♥உடல்நிலை சரியில்லை என்றாலும் விடுமுறை எடுக்க முடியாது. இரவும் பகலும் வேலை செய்ய வேண்டும். எப்போதும் வேலை செய்வதற்கு தயாராகவே இருக்க வேண்டும். எப்போதும் என்னை நோக்கி வீசப்படும் 'நாள் பூரா வீட்டுல சும்மாதானே இருக்கே?' என்கிற கேள்வியை எதிர்கொண்டபடி!
♥இதை படிக்கும் சகோதர ஆண்களே உங்கள் மனைவியை தாயை சகோதரியை மதியுங்கள் அவளுக்கும் ஓய்வு கொடுங்கள் மனரீதியாக....
♥இதில் இன்னும் மோசம் வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை..
0 Comments
Thank you