♥தீபாவளி பலகார, 'டிப்ஸ்'
♥ இரண்டு பங்கு பாசி பருப்பு, ஒரு பங்கு கடலை பருப்பு என்ற விகிதத்தில் அரைத்த மாவில், மைசூர்பாகு செய்தால், மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும். மைசூர்பாகு தேன் கூடாக வர, சோடா உப்பு ஒரு சிட்டிகை போட்டால் போதும்.
♥சர்க்கரை பாகு காய்ச்சும் போது, சில துளிகள் எலுமிச்சை சாறு விட்டால், பாகு முறுகாமல் இருக்கும்
♥லட்டு பிடிக்கும் போது, ஏதாவது பழ, 'எசன்சை' விட்டு கலந்தால், சுவையும், மணமும் அனைவரையும் கவரும்
♥எந்த வகையான இனிப்பு செய்தாலும், அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்க வேண்டும். இதனால், இனிப்பு திகட்டாமல் இருக்கும்
♥ பஜ்ஜி மாவில், சூடாக ஒரு கரண்டி எண்ணெய் அல்லது நெய் கலந்து, பஜ்ஜி சுட்டால், வாசனையாய் இருக்கும்; எண்ணெய் அதிகம் குடிக்காது
♥முறுக்கு மாவு பிசையும் போது, அத்துடன், ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி, மாவை நன்கு பிசைந்து சுட்டு எடுத்தால், நெய் மணத்துடன், கூடுதலான சுவையாக இருக்கும்
♥பலகாரம் செய்யும் முன், எண்ணெயில், இஞ்சி, வாழைப்பட்டை நசுக்கி போட்டு பொரித்து எடுத்த பின், உபயோகிக்க வேண்டும். இதனால், பலகாரம் எண்ணெய் குடிக்காது, பொங்கியும் வழியாது. எண்ணெய் புகையால், வாந்தி, தலைசுற்றல் வராது
♥ரவா, சேமியா மற்றும் அவல் கேசரி செய்யும்போது, வெள்ளரி விதை சேர்த்தால், வித்தியாச சுவையோடு இருக்கும். ரவா கேசரி செய்யும் போது, கால் ஆழாக்கு பாலையும் சேர்த்து கிளறினால், சுவை கூடும், திகட்டாமல் இருக்கும்
♥பயத்த மாவு லட்டு, ரவா லட்டு செய்யும் போது, முதலில் ஒரு தாம்பாளத்தில் அரைத்த சர்க்கரையையும், நெய்யையும் போட்டு கலக்கவும். பின், அதனுடன் ரவையோ, பயத்தம் மாவையோ சேர்த்து உருண்டை பிடிக்கவும். தேவைப்பட்டால், ரவையுடன் ஒரு கரண்டி பாலை தெளித்தால் சுலபமாக உருண்டை பிடிக்க வரும்
♥தீபாவளி பட்சணங்கள் சிக்கு வாடை அடிக்காமல் இருக்க, ஒரு சிறு துணியில், கைப்பிடி கல் உப்பை முடிச்சாக கட்டி, சம்படத்தின் அடியில் போட்டு வைக்கவும்.
சி. ரகுபதி
0 Comments
Thank you