HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

பெண்கள் அணியும் தாலியின் மகத்துவம்.

♥பெண்கள் அணியும் தாலியின் மகத்துவம்.

♥பெண்கள் திருமண பந்தத்தின் போது அணியும் தாலி என்பது மற்ற ஆபரணங்களை போல இல்லாமல் இதனை புனிதமானதாக கருதுகின்றனர்.

♥தென்னிந்தியாவை பொறுத்தவரை இது தாலி அல்லது திருமாங்கல்யம் என்றும், எது எப்படி இருப்பினும் இதன் பொருளும் இதன் முக்கியத்துவமும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக தான் இருக்கிறது.

♥தாலி என்பது மரியாதை, காதல், அன்பு மற்றும் கண்ணியம் போன்றவற்றை ஒரு ஆணும், பெண்ணும் இணையும் திருமண வாழ்வில் பிரதிபலிக்கும் அடையாளமாக காணப்படுகிறது. இது முக்கியமாக இந்துக்களின் திருமண பந்தத்தை பறைசாற்றும் அடையாளமாகவும் உள்ளது.

♥இதன்படிதான் தாலி என்பது இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுவாக தாலி வெவ்வேறு வடிவங்களில் வடிவமைக்கபடுகிறது. இந்த தாலியில் கடவுள் சிவபெருமானின் திருவுருவம் வைத்தால் மூன்று கிடைமட்ட கோடுகளையும், கடவுள் விஷ்ணுவின் திருவுருவம் என்றால் மூன்று செங்குத்தான கோடுகளை கொண்டும் வடிவமைக்கப்படுகிறது.

♥மேலும் இந்த தாலியை அறிவியலின் படி பார்த்தால் தாலி என்பது பெண்களின் இரத்த ஓட்டத்தை சரிசெய்கிறது. அதுமட்டுமல்லாது பெண்களின் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இதனால் தான் தாலியை மறைத்து உடலோடு ஒட்டி உரசும்படி அணிய வேண்டும் என்று கூறுகின்றனர்.

♥வடஇந்தியாவில் இந்த தாலி என்பது கறுப்பு மற்றும் தங்கமணிகள் கோர்க்கப்பட்ட நெக்லஸ் போன்று காணப்படும்.

♥இதில் உள்ள தங்கமணிகள் கடவுள் பார்வதி தேவியையும், கருப்பு மணிகள் கடவுள் சிவபெருமானையும் பறைசாற்றுகிறது. தங்கமணிகள் செல்வத்தையும், சந்தோஷத்தையும், வளத்தையும் பறைசாற்றுவதால் பெண்கள் இதை அணிந்து தங்கள் வீட்டின் சந்தோஷத்தையும், வளத்தையும் காக்கின்றனர்.

♥கருப்பு மணிகள் என்பவை கணவன், மனைவிக்கு இடையேயுள்ள உணர்வு பூர்வமான பந்தத்தில் முக்கியத்துவம் வகுக்கிறது. கருப்பு நிற மணிகள் எல்லா எதிர்மறை எண்ணங்களையும் நீக்கி, திருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்ற உதவுகிறது.

♥மேலும் கணவனின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் காக்கிறது. இந்த தாலி தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ அல்லது பாதிப்படைந்தாலோ இந்த பெண்கள் மிகவும் பயப்படுவர். பின் கடவுளை வேண்டி தன் கணவனை காக்கவேண்டுமென்றும், நீண்ட ஆயுளோடு வாழ வேண்டுமென்றும் வழிபாடு மேற்கொள்வார்கள்.

♥ஆனால் தற்போதைய மாடல் வாழ்க்கையில் தாலி என்கின்ற புனிதநூல் சடங்குகள் மறைந்து கொண்டே வருகிறது. இன்றைய பெண்கள் எப்போதாவது தாலியை அணிந்து கொள்ளுதல் அல்லது நிகழ்ச்சிகளுக்கு போகும்போது அணிதல் என்கின்ற முறைகளில் மட்டுமே அணிகின்றனர். இது ஒரு பேஷன் அடையாளமாக திருமணப்பந்தத்தில் மாறிவருகிறது.

♥இருப்பினும் இந்த தாலி என்கின்ற புனிதநூல் இந்துக்களின் திருமண பந்தத்தின் அடையாளமாக நிறைய ஆச்சரியமூட்டும் விளக்கங்களுடன் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments