HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

காலையில் தாமதமாக எழுந்தாலோ, சரியான உணவைச் சமைக்கவில்லை என்றாலோ, வீடு சுத்தம் செய்யப்படாமல் இருந்தாலோ குற்றவுணர்வுக்கு ஆளாகும் வகையில் பெண்களைக் கச்சிதமாக வடிவமைத்திருக்கிறது ஆணாதிக்கச் சமூகம்.

♥காலையில் தாமதமாக எழுந்தாலோ, சரியான உணவைச் சமைக்கவில்லை என்றாலோ, வீடு சுத்தம் செய்யப்படாமல் இருந்தாலோ குற்றவுணர்வுக்கு ஆளாகும் வகையில் பெண்களைக் கச்சிதமாக வடிவமைத்திருக்கிறது ஆணாதிக்கச் சமூகம். 
♥வீட்டிலும் வெளியிலுமாகப் பெண்கள் செய்கிற வேலைகளுக்கெல்லாம் ஊதியத்தை நிர்ணயித்தால், அது ஆண்களின் வருமானத்தை விஞ்சிவிடும். அந்த அச்சத்தால்தான் ஊதியமற்ற, அதிக உடலுழைப்புக் கோருகிற வேலைகளில் பெண்களை ஈடுபடுத்திவிட்டு ஆண்கள் காலாட்டியபடியே இருக்கிறார்கள், 

♥மாமதயானையை சிறுகுச்சியால் அடக்கிவிடுகிற பாகனைப் போல.இப்போது நிலைமை மாறிவிட்டது என்று சொல்கிறவர்கள், ‘இப்பல்லாம் யாருங்க சாதி பார்க்கிறாங்க?’ என்று சொல்கிறவர்களுக்கு நிகரானவர்கள். தவிர, அங்கொன்றும் இங்கொன்றுமான விதிவிலக்குகளே புதிய விதிகள் ஆகிவிடாது. 

♥அமர்ந்த இடத்திலேயே காபி, டீ கேட்கிறவர்களும், சாப்பிட்ட தட்டிலேயே கையைக் கழுவுகிறவர்களும், தன் உள்ளாடைகளைக்கூடத் துவைத்துக் கொள்ளாதவர்களும், ‘வீட்ல அப்படி என்னதான் வேலை இருக்கோ’ என்று சலித்துக்கொள்கிறவர்களும், தட்டில் விழுகிற உணவுக்காகச் சிறு விரலைக்கூட அசைக்காத ஆண்களும் தங்கள் வீட்டுப் பெண்களின் உழைப்பை உறிஞ்சி வாழ்கிறவர்களே.

♥தோழிகளே, வீட்டு வேலைகள் அனைத்தும் ஏன் பெண்களின் தலையிலேயே சுமத்தப்படு கின்றன? ஊதியம் இல்லை என்பதாலேயே பெண்களின் உழைப்பு கணக்கில்கொள்ளப்படாமல் இருப்பதன் அடிப்படையை எப்படிச் சீரமைப்பது? 

♥வீட்டு வேலைகள் அனைத்திலும் ஆண்களுக்கும் பங்கு இருப்பதை எப்படி நடைமுறைப்படுத்துவது? உங்கள் கருத்து என்ன, அனுபவம் என்ன? எழுதுங்கள்.... உங்கள் கருத்தை.

Post a Comment

0 Comments