♥இருசராருக்கும் கற்புண்டு என்பதை ஏற்றுக்கொள்ளும்போது கற்பின் ஒழுக்கமும் இரு சாராருக்கும் தான்! என்பதையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
கற்பு ஒழுக்கம் பெண்ணுக்கு மட்டுமல்ல என்பதை ஆண்கள் உணர வேண்டும்.]
♥பெண்களின் நிலையை மட்டும் பேசி விட்டு ஆண்கள் தங்களது கற்பை மறந்து வாழ்வது சரியல்ல. நியாயமும் அல்ல.
♥”புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது” என பழமொழி கூறுவார்கள். அதுபோல் பெண்களிடம் எவ்வளவுதான் கலாச்சார சீர்கேடுகள் வந்தாலும் ஒரு நல்ல தரமான பெண் தன் கற்பொழுக்கத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்.
♥நாகரீக ஆடை உடுத்துவதால்.. ஆண்களிடம் சகஜமாக பேசுவதால் அவள் தன் கற்பை சமரசம் செய்வாள் என எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
0 Comments
Thank you