#சீனியர்ஸ் #அண்ணாக்களுக்கு #சின்னக்கடிதம்
வறுமையின் பிடி என்னை
வாழ்க்கையை வெல்வதற்கு
கல்வியின்
கனதியை உணர்த்தி விட்டது.
இடப்பெயர்வு எங்களின்
இருப்பிடத்தை மட்டும் இல்லாதொழிக்கவில்லை.
இதய பலத்தையும் இரண்டாக்கிவிட்டது.
துன்பம் நிறை நம் வாழ்க்கையின்
துவக்கப்புள்ளியில் இருந்தே மறுபடியும்
தொடங்க வேண்டிய
துர்ப்பாக்கியம்! எனக்கு
முன் மாதிரியானவர்கள்
முழு தொழில் மனிதர்களை கண்டால்
மூச்சு முட்டும்!
இப்படி நான் ஆகவேண்டுமென
கடன் பட்டாவது படி
காணி வித்தாவது படி
கடவுளைவிட கல்வியை நம்பு!
அடிக்கோடிட்ட ஆசிரியர்களின் வார்த்தைகள் என்னை
அடிக்கடி உசுப்பி விடும்.
சிலிர்க்கும் கடும் குளிர்
சிக்கன விளக்கு வெளிச்சம்
செக்கியூரிட்டி வேலை செய்து
பேர்சனலா கிளாஸ் குடுத்து
பேனை கொப்பி வாங்கி
கண்முளிச்சு படிச்சன்!
கம்பஸ் கிடைச்சுது.
கனவுகள் பலிச்சதாய்
கற்பனை முளைச்சுது!
இரும்பு கதிரை என் காலில் போட்டு இருக்கையில் இருந்தார்கள்!
கதையேதுமின்றி
காதில் மேல் அறைந்தார்கள்!
உள்ளாடை இன்றியே
ஒருவருடம் வரச்சொல்லி உறுக்கிச்சொன்னார்கள்.
கட்டையாக முடிவெட்ட காசு மிச்சம் பிடிக்கிறான் எண்டனர்.
கலர் சேட் போட்டதற்கு
காட்டான் எண்டார்க்ள்.
கடலை விற்று அம்மா அனுப்பின காசில் கள்,சாராயம் கேட்டார்கள்.
இதற்கு பின்னும் இனியென்ன?
இலட்சியமே வேண்டாம் அம்மா
வீடு வருகின்றேன்
விவசாயம் செய்தே பிழைப்பது மேலென..
0 Comments
Thank you