HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மணி_பிளான்ட் வளர்ப்பதால் பணப் பிரச்சனை தீருமா?செல்வம் தரும் மணி பிளான்ட் செடி...! வீட்டில் எப்படி வளர்க்கவேண்டும் தெரியுமா?

♥#மணி_பிளான்ட் வளர்ப்பதால் பணப் பிரச்சனை தீருமா?
செல்வம் தரும் மணி பிளான்ட் செடி...! வீட்டில் எப்படி வளர்க்கவேண்டும் தெரியுமா?
♥பொதுவாகவே, மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும், கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது.

♥மணி பிளான்ட் தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் செடி வகையாகும். மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இது மிகவும் பிரபலம்.

♥ மணி பிளான்ட் வீட்டை அலங்கரிக்க பயன்தரும் செடியாகும். இதை வளர்ப்பதற்கு பெரியதாய் எந்தவொரு செலவும் ஆகாது. ஒவ்வொரு இலையாக துளிர்விட்டு வளரும் பண்புடையது மணி பிளான்ட். இவை இதயம் போன்ற வடிவில் வளரக்கூடியது.

♥#பாசிடிவ்எனர்ஜி :
மணி பிளான்ட் வீட்டில் வளர்க்க விரும்புவோர் அதை சரியான திசையில் வளர்க்க வேண்டும். வாஸ்து நிபுணர்கள் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசை நோக்கி தான் வளர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

♥ஏனென்றால், தென்கிழக்கு திசையில் தான் அதிகம் பாசிடிவ் எனர்ஜி கிடைக்கிறது. இந்த திசையில் தான் மணி பிளான்ட் நன்கு வளரும் மற்றும் இதனால் செல்வம் பெருகும் யோகம் பெற முடியும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

♥#விநாயகரின்திசை :
தென்கிழக்கு திசை விநாயகருக்கு உகந்த திசையாகும். இது சுக்கிரனை பிரதிநிதித்துவம் செய்யும் திசை எனக் கூறப்படுகிறது.

♥இதன் காரணங்களுக்காகத்தான் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசையில் வைக்க சொல்கிறார்கள்.

♥#செல்வம்பெருகுவதற்கான #காரணங்கள் :

♥தென்கிழக்கு திசையில் மணி பிளான்ட்டை வைப்பதால், விநாயகர் தீயவனவற்றை நீக்குகிறார் என்றும், சுக்கிரன் செல்வம் பெருக செய்கிறார் என்ற நம்பிக்கை நிலவிகிறது.

♥வடகிழக்கு, குருவின் திசையை பிரதிநிதித்துவம் செய்கிறது. சுக்கிரனும், குருவும் எதிரிகளாக கருதப்படுகிறார்கள்.

#வைக்கக்கூடாத_திசை :
♥எக்காரணம் கொண்டும் மணி பிளான்ட்டை வடகிழக்கு திசையில் வைக்கக்கூடாது. அந்த திசையில் வைத்தால் நஷ்டம் ஏற்படும். ஏனெனில் இது எதிர்வினையை அதிகரிக்கும் திசை என கூறுகிறார்கள்.

♥ஆனால், துளசி செடியை வடகிழக்கு திசையில் வைப்பதுதான் சரியானது என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள். 

♥செல்வம் பெருகும் மணி பிளான்ட்...!
செல்வம் பெருகும் மணி பிளான்ட்டை மண்ணிலும், நீரிலும் வளர்க்கலாம். 
அதே போல் வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என அவரவர் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் வைத்து வளர்க்கலாம்.

♥இதனால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும். ஓரிரு இலைகள் வாடினால் கூட விரைவாக அந்த இலைகளை அகற்றிவிட வேண்டும். இல்லையேல் இது பரவி மொத்த செடியையும் அழித்துவிடும்.

Post a Comment

0 Comments