♥சின்ன வேலையோ, பெரிய வேலையோ...
♥கோடிகளில் ஒப்பந்தம் எடுத்து, வீடுகள் கட்டித்தரும் ஒப்பந்ததாரர் அவர். சமீபத்தில், ஒரு இடத்தில், துணைக்கு ஒரு ஆளை வைத்து, சிறிய வேலையை செய்தபடி இருந்ததை. ஆச்சரியமாக பார்த்தேன்.
♥'உடைஞ்சு போன, பழைய, 'ஸ்லாப்'பை எடுத்துட்டு, புதுசு போடணும்ன்னாங்க. இம்மாதிரி சின்ன சின்ன வேலைகளுக்கு, 'பிட்' வேலைன்னு பேரு. 3,000 முதல், 10,000 ரூபாய் வரைக்குமான, 'பட்ஜெட்'ல நடக்கும். ஒரு மணி நேரத்திலிருந்து அதிகபட்சம் அரை நாளில் முடிந்து விடும். 'மெட்டீரியல்' மற்றும் ஆள் கூலி போக, நமக்கு, 30 சதவீதம் வரை லாபம் கிடைக்கும்.
♥'பெரிய வாய்ப்பு எப்போதாவதுதான் வரும்; சின்ன வேலைகள் எப்போதும் இருக்கும். வேலையில் சின்ன வேலை, பெரிய வேலைன்னு எதுவும் கிடையாது. வேலை செய்துக்கிட்டிருக்கணும்; பணம் சம்பாதிச்சிட்டிருக்கணும்; அதுதான் முக்கியம்...' என்று, உழைப்பின் மகத்துவத்தை கூறினார்.
♥எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டிய மனோபாவம்; கடைப்பிடிக்க வேண்டிய கொள்கையும் கூட!
செய்வோமா?
—எஸ்.ஆனந்த், சென்னை
0 Comments
Thank you