♥யாரையும் நம்பாதே...!
♥மண்ணெண்ணெய் வாசம்
மல்லிகை வாசமாய் போலியாய் தான் மணக்கும்..
♥ஆம் பெண்ணே...
மூச்சு முட்ட பேசுவான்..!!
முண்ணூறு தடவை உன் பெயரை மட்டும் முனுமுனுப்பான்...!!
கற்ற வித்தையெல்லாம்
உன் காலடியில் வீசுவான்..!!
♥நிலாவை நீ என்பான்..!!
தேனீக்கள் எடுக்கும் தேனே நீ என்பான்...!!
நகரும் நட்சத்திரமே நீ தான் என்பான்..!
♥தோழன் என்பான்..!
தோள் கொடு என்பான்...! தோளோடு தொடர்ந்து
உன் தோலையும் கேட்பான்...!!
♥ஆம் .....!!
அத்தனையும் பேசுவதே...
உன்னிடம் அத்துமீற தானே...!
♥மண் திங்கும் தோலுக்கு ஏன் இந்த மானிடனுக்கு அவ்வளவு போராட்டமோ..??
♥ஆசையை அமல்படுத்தும் வரை அன்பாய் நடத்துவான்..!!
காரியம் கைக்கிட்டும் வரை கதை எழுதுவான்..!!
♥இன்று கையில் எடுக்கும் ஊசி தவறி விழுந்தால் நாளை உன் கால்களை அது பதம் பார்க்கும் என்பதை மறவாதே...!!
♥மரத்தின் கீழ் இருப்பதெல்லாம் நிழல் மட்டுமே என எண்ணாதே......!!
அந்நியன் எல்லாம் உன் அண்ணண் என்று நினைக்காதே .....!
♥இது கலிகாலம்...
கற்பை பலிகேக்கும் காலம்..!!
♥யாரையும் நம்பாதே..உன் பெற்றோரை தவிர...!!
♥எழுத்தாணி முனையில் மோகன
0 Comments
Thank you