♥பின்மாதவிடாய்க் குருதிப்போக்கு (குருதிச்சொட்டு)
♥மாதவிலக்கு நின்ற பின் குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு இரத்தப்போக்கு தொடருவது பின்மாதவிடாய்க் குருதிப்போக்கு ஆகும். ஒரு பெண் மாதவிடாய் நிற்கும் கட்டத்தை அடைந்த பின் (பொதுவாக 45-49 வயது) 12 மாதங்களுக்கு மாதவிலக்கு வராமல் இருந்தால் அவருக்கு மாதவிலக்கு நின்று போய் விட்டது என்று கருதலாம்.
♥மாதவிடாய் நின்ற பின் பொதுவாக இரத்தப் போக்கு இருப்பதில்லை. அவ்வாறு இருந்தால் மருத்துவரை அணுகி, இரத்தக் கறை பட்டாலும், வேறு கடுமையான மருத்துவ பிரச்சினைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
#நோயறிகுறிகள்
♥பின்மாதவிடாய்க் குருதிப்போக்கிற்குப் பல ஆரோக்கியப் பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். அவற்றில் அடங்குவன:
♥பெண்மை நீர்ம அளவு குறைவு படுவதால் யோனி அல்லது கருப்பையின் புறணி அழற்சியுறுதல் அல்லது மெலிதல்.
♥சவ்வுக்கழலை: கருப்பை வாய் அல்லது கருப்பையில் விழுது போன்ற சவ்வு வளர்ச்சி (பொதுவாகப் புற்றாக இருக்காது).
♥இயக்குநீர் மாற்று சிகிச்சையால் கருப்பைப் புறணி கட்டியாதல்
♥கருப்பை அல்லது கருப்பை வாயின் அசாதாரண நிலை.
♥யோனியின் புறணி தடித்தல்: மிகை பெண்மை இயக்குநீரும் மிகக் குறைந்த அளவு சினையியக்கு நீரும் இருப்பதன் விளைவாக யோனியின் புறணி தடித்தல்; இதனால் இரத்தப் போக்கும் இருக்கலாம்.
♥யோனிப் புற்று: பின்மாதவிடாய் இரத்தப் போக்கு யோனிப் புற்று நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
♥பிற காரணங்களில் அடங்குவன: கருப்பை அல்லது கருப்பை வாய்த் தொற்று, இரத்த மெலிவூட்டிகள் போன்ற சில மருந்துகள், பிற வகை புற்று நோய் ஆகியவற்றாலும் இரத்தப்போக்கு ஏற்படலாம்.
#நோய்கண்டறிதல்
♥சரியான காரணத்தைக் கண்டறிய: மருத்துவர், மருத்துவ வரலாற்றைக் கேட்பதோடு கருப்பைவாய்ச் சோதனையும் (பேப் சோதனை) செய்வார். மேலும் பரிந்துரைக்கப்படும் சோதனைகள் வருமாறு:
கருப்பைக் கேளா ஒலி சோதனை
கருப்பைப் புறணி திசுச்சோதனை
கருப்பை அகநோக்கல்
#நோய்மேலாண்மை
♥குருதிப்போக்குக்கான காரணத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
♥சவ்வுக்கழலையால் இரத்தப்போக்கு இருந்தால் அதை அகற்ற அறுவை சிகிச்சை தேவைப்படும்.
♥கருப்பை அகப்படல மெலிவுக்கு சினையியக்குநீர் சிகிச்சை மருந்துகள் அல்லது கருப்பை அகப்படல தடிப்பு அறுவை சிகிச்சையால் அகற்றல்
♥கருப்பை அகப்படல மிகைத் திசு வளர்ச்சி இருந்தால் மகப்பேறு மருத்துவரை அணுகி, தொடர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
♥இயக்குநீர் மாற்று சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தால் மருத்துவர் மருந்து உட்கொள்ளும் அளவை நிலைமைக்குத் தகுந்தபடி குறைக்கலாம்
0 Comments
Thank you