♥#போகும்_பாதை_தூரமே!!!
♥காதலின் அர்த்தம் கேட்டால் என் மனைவி என்று தான் கூறுவேன் நான். எங்களின் 35 வருடக்கால தாம்பத்தியத்தில் மீண்டும் பிறப்பொன்று வேண்டும்; அதிலும் அவளே என் மனைவியாகிட வேண்டும் என்று கேட்பவன் நான்.
♥எனக்கு அவள் உறவு. அவளுக்கு நான் உறவு என்றானோம் இரு பிள்ளைகளும் வெளிநாட்டில் தஞ்சம் ஆன பிறகு. எங்களைக் காக்காத பிள்ளைகளை நாங்களும் கண்டு கொள்வதில்லை.
♥எங்களின் உலகமே அழகான ஒன்று. அந்திமக் காலத்தின் முதுமையிலும் இளமையின் இனிமையில் தான் நாங்கள் இருவரும்.
♥ஒவ்வொரு வருடமும் எங்காவது சிறகடித்து பறக்கும் எண்ணத்தில் வெளிநாடு சுற்றுலா செல்பவர்கள் நாங்கள்.
♥இம்முறை நாங்கள் சென்று வந்த இடம் சீனா.
♥"இந்த ஊர் வேண்டாங்க , நாம வேற நாட்டுக்குப் போலாமே" அன்று அவளின் பேச்சை நான் கேட்டு இருக்கலாமோ? இன்று வருந்துகிறேனே.
♥"இல்ல, வேற நாட்டுக்கு நாம அடுத்த முறை போலாமே, இந்த முறை சீனா போலாம்."
♥என் ஆசைகளில் என்றுமே மறுப்பு சொல்லாத என் இல்லதரசி இதற்கா மறுக்கப் போகிறாள்.
♥சீனா அழகான நதிகளும் , இரசிக்கும் இயற்கையும் கொண்ட ஒரு நாடு தான். உணவு முறைகள் தான் சுற்றுப்பயணிகளைக் கொஞ்சம் அச்சுறுத்தும்.
♥இருந்தும் சீனாவுக்குச் செல்லும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததே இல்லை.
♥அங்கிருந்த 10 நாட்களும் எங்களின் பயணம் இனிமையாகவே இருந்தது. என் மனைவி தான் உணவுக்காகக் கொஞ்சம் சிரமப்பட்டாள். நான் ஏற்கனவே வந்து சென்ற ஊர் என்பதால் சமாளித்தேன்.
♥"வீட்டுக்குப் போனாதும் நல்லா சமைச்சி சாப்பிடனும். நாக்கே செத்து போச்சி" என்ற என் மனைவியின் புலம்பலுடன் நம் நாடு வந்து சேர்ந்தோம்.
♥இங்கே வந்த ஒரு வாரம் தான் ஆனது. தொலைக்காட்சி , வானொலி, புலனம், முகநூல், அனைத்தும் அதிர்ச்சியான செய்தியைத் தாங்கி வந்தன. என்னுள் ஏதோ ஓர் இனம் புரியா உணர்வு.
♥என்னவளும் சோர்வுடனே என் கண்களுக்குத் தெரிந்தாள். அவள் இரும்மினாலோ தும்பினாலோ ஏதோ தவறு செய்த உணர்வு என்னுள். எனக்கும் அவ்வப்போது வந்து போன இருமல், தும்பல் என் தொண்டைக்குழியை ஏதோ வரட்சியாக்கியது.
♥'எங்களையும் தாக்கி இருக்குமா இந்த வைரஸ்? '
♥'கொரோனா இந்த அரக்கன் எங்கள் அந்திம காலத்தின் எமனாகிடுமோ??? ''டாக்டரிடம் போலாமா ? போனால் கோவைட் 19 இருப்பது உறுதியானால் எங்களின் மகிழ்ச்சி காணாமல் போய்விடுமோ? '
♥‘எங்களின் இந்த அழகான அந்திம காலத்தின் பயணம் கொரோனா எனும் அரக்கனால் அழிந்திடுமோ?’
♥எத்தனை கேள்விகள்.. பதிலை எங்கே தேடுவேன்.....
♥என்னவளையும் கலவரப்படுத்த நான் விரும்பவில்லை. இன்னும் இளமை துள்ளலுடன் சமையல் அறையில் சமைத்துக்கொண்டிருந்தாள்.
♥என் உயிரை அழைத்தேன்.
"உடம்பு கொஞ்சம் முடியல. டாக்டரைப் பார்த்து வரலாமா?
" என்னங்க ... என்னாச்சி"
♥" அது வந்து ..... ”என் உயிரின் மீதி அல்லவா?
♥" இரத்தம் எடுத்து பார்க்கனுமாங்க.. இருங்க உடை மாற்றிட்டு வந்துடுறேன். வந்து சாப்பிடலாம். உங்களுக்குப் பிடிச்ச சாம்பார், நெத்திலி சம்பல் வைச்சிருக்கேன்.”
" உனக்கு எப்படி ??
♥" நானும் தான் செய்தி கேட்கிறேன். தெரியாதா எனக்கு? அவளின் திடமான பதில் என்னுள் புத்துணர்ச்சி கொடுத்தது.
“ உனக்குப் பயமா இல்லையா?
♥“என்னங்க பயம். சரியான முறையில் சுத்தமா இருக்கோம்; நிறைய தண்ணீர் குடிக்கிறோம். நம் முன்னோர்களின் மருத்துவ முறையை இதுவரை பின்பற்றி வரோம்; ஒரே ஒரு சந்தேகம் நாம் போய் வந்த இடம்; அதையும் சோதிச்சி பார்த்திடலாம் வாங்க.”
♥‘இவளுக்குள் இவ்வளவு திடமா?’ ஏதோ ஒரு நம்பிக்கையுடன் அவளுடன் கிளம்பினேன்.
♥இருவரும் மருத்துவரிடம் சென்றோம். எங்களின் இரத்தம் பரிசோதனைக்குச் சென்றது. முடிவு இன்னும் சிறிது நேரத்தில் ........
♥இன்று..... இப்போ நானும் அவளும் அடுத்த பயணத்தில்.....
♥அவள் விரும்பிய எங்கள் வீட்டில் .... ஓர் அழகான வாழ்க்கை பயணத்தில் என் மடியில் அவள்.... அவளின் அணைப்பில் நான்.
♥வைரஸ் எனும் தடைகளை மீறி இன்னும் அமைதியாய் எங்களின் அந்திம கால பயணம் தொடர்கிறது !!!
0 Comments
Thank you