♥நாட்டை ஆட்சி செய்ய மன்னன் இருந்தாலும் அந்த மன்னனையும் வீட்டையும் ஆட்சி செய்ய பெண் என்ற மனைவி தான் வேண்டும்
♥வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர்
♥ஆணுக்கு சமமானவள் பெண் என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்கள் பல வெற்றிக்கனியை பறித்துக்கொண்டிருக்கிறார்கள்.
♥பெண் பிரதமர், பெண் ஜனாதிபதி, பெண் முதலமைச்சர்கள், பெண் விளையாட்டு வீரர்கள், விண்வெளி வீராங்கனைகள் என்று உலகம் பெருமைப்படும் அளவிற்கு பெண்களின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
♥பொறுமைக்கு இலக்கணமாய்
புனிதத்திற்கு பொருத்தமாய்
அடக்கம் அறிந்தவளாய்
அகங்காரம் தொலைத்தவளாய்
அன்பிற்கு பணிபவள்...!
பெண்...!!
♥பெண்களின் இந்த குணங்கள்தான் வெற்றி அடைய செய்கிறதா?
♥எந்த விஷயத்தையும் பெண்கள் எளிமையாகக் கற்றுக்கொள்வார்கள்.
♥சுகாதார விஷயத்தில் பெண்கள் எப்போதும் பல படிகள் மேலே என்பதை யாராலும் மறுக்க முடியாது.
♥தன்மானத்தைக் காத்துக்கொள்வதில் பெண்கள் பெரும் பங்காற்றுவார்கள்.
♥எந்தவொரு விஷயத்திலும் பெண்கள் தெளிவு மற்றும் உறுதி கொண்டவர்களாக தோற்றம் அளிப்பார்கள்.
♥பெற்றோர்களின் மீது அக்கறை செலுத்துவதில் பெண்கள் முதன்மையானவர்கள்.
♥சேமிப்பு என்று வந்துவிட்டால், அதிலும் பெண்கள்தான் சிறந்தவர்கள்.
♥நாட்டை ஆட்சி செய்ய மன்னன் இருந்தாலும், ஒரு வீட்டை ஆட்சி செய்ய ஒரு பெண்தான் வேண்டும் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. அது எந்த காலத்திலும் மாற்ற முடியாத ஒன்று என்பதை உணர்ந்து... பெண்மையை போற்றுவோம்.
0 Comments
Thank you