#இப்படி #ஒருமகள் #எனக்கு #கிடைக்கலயே
இருபதிலை அவள்
என்கிட்ட வந்தவள்
எழுபதில் ஏனோ எமன் எடுத்திட்டான்! மனிசர்க்கு சாவு வருமெண்டு தெரிஞ்சும்
எனக்கு முன் போனதால ஏனோ ஏக்கம்..
தலைமாட்டில் தேனீர்
தவிச்ச விடாய்க்கு தண்ணீர்
தலையிடி நேரத்தில் தைலம் எண்டு
இருந்த இடத்திலயே எல்லாம் வரும்!
சீமாட்டி இருக்கையில் சிங்கம் தான் நானும்
எனக்கு வருத்தம் எண்டா
ஏனோ சுருண்டுடுவன்
தனக்கு வருத்தமெண்டா தடயம் வைச்சதில்லை...
பெத்தது மூண்டும் பெடியள் எண்டு
பெருமை அடிச்சிருக்கன்.
மூத்தவன் கம்பஸ் அங்கயே பாத்திட்டான்
ஒத்தப்பிள்ளை அவளெண்டு
ஒரேபிடியா நிண்டதால
கட்டி வைச்சாச்சு கலியாணம்.
அப்பன்ர சுமையை அரைவாசி பொறுப்பனென்று அடுத்தவனை நம்பினம்.
அண்ணன்ர குணம்
அவனுக்கும் இருக்காதோ?
காலம் போச்சுது
கடைசிக்கும் செய்து வைச்சம்
காலவாரி போகுமெண்டு கடசிவரை நினைக்கவில்லை
மாடும், கோழியும் ,மனைசியும் நானுமெண்டு ஏலுமட்டும் பிழைப்பம் இல்லாட்டி சாவமெண்டுஇருக்கையில
இவளும் போயிட்டாள் இருந்து இனியென்ன?
கட்ட சறம் இல்லை
கண்ணாடியிலும் பார்வையில்லை
பாக்கு வெத்திலைக்கும் பைசா காசில்லை.
எத்தனை பெத்தென்னை
இவளும் போயிட்டாள் இருந்து இனியென்ன?
இப்படித்தான் நினைச்சிருந்தன்..
மூத்தவன் போனவன்
மூன்றுவருசம் தொடர்பில்லை- அம்மா செத்ததுக்கு ஐந்நூறு டொலர் மட்டும்..
ஏனோ தெரியாது இடையில ஒருக்காலும் எட்டிப்பார்க்கல.
இரண்டாவது இன்ஞினியர்
இங்கிலாந்து போயிட்டான்..
என்ன வேலையோ எடுத்து கதைச்சதில்லை
பாவம் பிள்ளையெண்டு நானும் விட்டுட்டன்
கடைசின்ர மனுசி
சனியும் ஞாயிறும் பிள்ளைக்கு லீவு சனிக்கிழமை வருவால்
வெத்திலயும் பாக்கும் தீவகப்புகையிலும் விசேச தினமெண்டால்
விரும்பின எல்லாம் விதம் விதமா..
சலூனுக்கு கூட்டி போவாள்
தலைகழுவ தண்ணி ஊத்தி
சறம் கூட மாத்தி விடுவாள்
மருத்து குளுசையெல்லம் மறக்காம
எடுத்து வைப்பாள் மனிசி இல்லை குறைய குறைச்சிடுவாள்
அடுத்த நாள் திரும்புகையில் அவனுக்கு தெரியாமலே ஐந்நூறு கையில் வைப்பாள்
எனக்கு எதுக்கும்மா? எண்டு இழுக்கையில்
எதிர்த்து கதைக்க கூடா எண்டொரு அதட்டல்
எப்படா சனிக்கிழமை வரும்
எண்டொரு ஏக்கம்
எனக்கும் அடிக்கடி
எத்தனை பெத்தென்ன பெருமை அடிச்சென்ன
இப்படி ஒரு மகள் எனக்கு கிடைக்கலயே?
0 Comments
Thank you