♥கல்யாண புரோக்கர் ரகுபதியிடம் வந்தார். நீட்டினார்
ரகுபதி அலசினார். ஒன்றைத் தேர்வுசெய்தார்
♥“ரவி, இந்த இடம் நல்லாயிருக்கு, பார்த்து ஓ.கே. சொல்லு”
என்றார், பிள்ளையிடம் தந்தார்.
♥“ப்ச், பொண்ணு சுமார் அழகு, வேண்டாமே”
♥“டேய்…அழகு சோறு போடாது, பொண்ணு வீடு நல்ல வெயிட்
ஏகத்துக்கு நிலம் ,நீச்சு இருக்கு.., யோசி…”
♥ரவி தலையாட்டினான். தாலியைக் கட்டினான்.
ஒரு மாதம் கடந்தது. ரவியின் புது மனைவி எகிறினாள்.
♥‘இந்தாங்க..இனமேயும் தாங்காது! என் அப்பா வீட்டுகிட்ட
தனிக்குடித்தன்ம போயிடலாங்க…”
♥‘ஒரு மாசத்துலயா? ஊர் சிரிக்கும்டி, என் அப்பா எவ்ளோ
கஷ்டப்படுவார்…?”
♥‘ஊர் வாய் துட்டு தராது, சொந்தம் சொத்து தராது.
என் அப்பா தருவார், யோசிங்க…”
♥ரவி மீண்டும் தலையாட்டினான்…நடையைக் கட்டினான்.
♥அப்பா விதிர்த்து போய் நின்றார்…!
0 Comments
Thank you