♥நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்கு செல்லும்போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
♥ஒரு கட்டிடம் கட்டும்போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டிடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.
♥கட்டிடம் முடிந்து கிரகப்பிரவேசத்தன்று எந்தக் கட்டிடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரகப்பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.
♥அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய்விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கைதான் வாழும்.
♥அதை ஆடு, மாடுகள் மேயும், குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பையில் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை.
♥சவுக்கு மரம் அடுத்த கட்டிடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!
0 Comments
Thank you