#வேலைமட்டும் #வாழ்வல்ல
வாரம் முழுதும் தொடர்வேலை கூட
வாழ்வில் விரிசல் உண்டுபண்ணும்!
வருடம் முழுதும் வேலை சென்று- பலர்
வாழ்வைத்தொலைத்த கதைகளுண்டு
மனைவி பிள்ளை முகம் காணா
பதவி , பணம் பெரிதுமில்லை.
மாடாய் உழைத்த பலருக்கும் அங்கு
மனிதர் பட்டமே கிடைப்பதில்லை.
ஓடாய் நீயும் உழைப்பதனால்
உனக்கு சிலைகள் யாரும் வைப்பதில்லை.
வாழத்தேவை வேலையொன்று
மாற்றுக்கருத்து எதுவுமில்லை.
வேலை மட்டும் வாழ்வென்றால்
வீணே துன்பம் பெருகிவிடும்.
உறவுகள் எல்லாம் ஒன்று கூடி
ஒரு நாளேனும் இடையிடையே
பழகிட வேணும் சேர்ந்துண்ண..
அறுபது முடிந்தால் மாலை போட்டு
அனுப்பி விட்டால் வீட்டுக்கு
அதற்கு பின் அங்கெல்லாம்- சிறு
அலுவல் எமக்கு கிடையாது.
வேலை மட்டும் வாழ்வென்பான்
விழுந்தால் கந்தோர் வருவதில்லை. சாலையோரம் தலைசுத்தி
சரிந்தால் வருவது உறவுகளே!
0 Comments
Thank you