#இது #தான் #அவர்கள் #விதியோ?
நண்பனொருவன் இருந்தான் நல்லாப்படிப்பான்.
நிறத்தில் கறுப்பாகிலும்
குணத்தில சிறப்பு.
செத்தவீடு போனாலும்
வெத்திலை கூட தொட்டதில்லை.
அடுத்த வகுப்பில
அஞ்சலி எண்டொருத்தி.
இரட்டை ஜடை பின்னல்.
நெற்றில ஒரு குறி
கலர் குறைவெண்டாலும்
கண்ணுக்க குத்திற
கவர்ச்சியான பிள்ளை.
பவுடர் வாசமே
பல பேரைக்கவர்த்திழுக்கும்
ஆறேழு மாசமா அவன்
அலைஞ்சு திரிஞ்சான்
அஞ்சாறு வார்த்தைக்கூட
அவளோட கதைச்சதில்ல
என்னை பாவம் செய்தனோ
எள்ளோடு சேர்ந்த
எலிப்புழுக்கை கதையா
என்னையும் சேர்த்துக்கொண்டு!
அமாவாசை பெளர்வம்
அதிஸ்ட நாள் எல்லாம் பார்த்து
அவளட்ட காதல் சொன்னான்
அலட்சியமா போயிட்டாள்.
இரண்டு வருசம் கழிய
இதையெல்லாம் மறந்து -அவன்
இப்ப இஞ்சினியர் படிக்கிறான்
நாலைஞ்சு வருசம் கழிய
நான் அவளைக்கண்டேன்!
இடுப்பில ஒண்டு
ஆறு மாசத்தயாரிப்பில
அடுத்தது வயித்துல.
அவளுடன்..
கடைத்தெருவில் செல்லும் போதும்
கையில் குறை பீடி
கஞ்சா அடிப்பவன் போல
கறைபடிந்த பல்.
கணவனாய்த்தான் இருக்க வேண்டும்.
எத்தனையோ தெரிவுகள்
இருக்கையிலும் இவர்களுக்கு !
இப்படி ஏன் விழுகிறார்கள்?
பொள்ளாச்சி சொல்லும்
பேரதிர்ச்சி கதைகள்போல..
0 Comments
Thank you