♥கணவரின் வருமானம் போதாததால், நானும், என் தோழியும் தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்ல முடிவெடுத்தோம். அத்தொழிற்சாலையில் நிறைய ஆண்கள் பணிபுரிந்ததால், ஒருவித பயத்துடனே வேலைக்கு சென்றோம்.
♥ஆனால், அங்கு, உடன் பணிபுரியும் பெண்களிடம், ஆண்கள் கண்ணியமாக நடந்து கொள்வதைப் பார்த்து ஆச்சரிய மடைந்தோம்.
அங்கு பணிபுரியும் ஒரு பெண்ணிடம் விசாரித்த போது, அதற்கான காரணம் புரிந்தது.
♥தொழிற்சாலை முதலாளியின் மனைவி, அவ்வப்போது தொழிற்சாலைக்கு வந்து, அலுவலக பணியாளர் முதல் துப்புரவு தொழிலாளர் வரை அனைத்து பெண்களிடம் மனம் விட்டு பேசி, அவர்களது குறைகளை கேட்பாராம்.
♥பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஆண்களை எச்சரிப்பது அல்லது வேலையை விட்டு நீக்குவது என, அதிரடியாக செயல்படுவதாகவும், கேட்பவர் பெண்ணாக இருப்பதால், பெண்கள் தங்களது பிரச்னையை வெளிப்படையாக கூறுவதாகவும் கூறினார், அந்தப் பெண்.
♥புதிதாக வேலைக்கு சேர்ந்த எங்களை வாழ்த்திய முதலாளியம்மா, தன் மொபைல் நம்பரை எங்களிடம் கொடுத்து, 'உங்களுக்கு ஏதாவது பிரச்னையென்றால் எந்நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம்...' என்றார்.
♥ஏதாவது எசகு பிசகாக நடந்து கொண்டால், உடனுக்குடன் முதலாளியம்மாவுக்கு தகவல் போய் விடும் என்று பயந்து, ஒரு சில சபல புத்தி ஆண்கள் எப்போதும் வாலை சுருட்டியபடி வேலை செய்கின்றனர்.
♥இவரைப் போன்று, முதலாளி யம்மாக்கள் தங்களது நிறுவனத்திற்கு அவ்வப்போது வருகை தந்து, பணிபுரியும் பெண்களின் பாதுகாப்புக்கு வழிவகை செய்தால், பணிபுரியும் பெண்ணினம் நிம்மதி பெறுமே!
0 Comments
Thank you