♥பெண்கள் தாமதமாக பருவம் அடைவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதா? அல்லது ஆபத்தா ?
♥பூப்பெய்தல் பெண்களுக்கு ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வாகும், ஒரு சிலர் மிக சீக்கிரமாகவும், தாமதமாகவும் பூப்பெய்துகின்றனர்.
♥பெண்கள் அவர்களின் 12 வயதிற்கு மேல் பூப்பெய்து, 50 வயதிற்கு மேல் மெனோபஸ் நிலையை அடைந்தால் அவர்கள் 90 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்
♥மேலும் தாமதமாக பூப்பெய்தும் பெண்களுக்கு( 13 வயதுக்கு மேல் ) இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளதாகவும், தாமதமாக மெனோபஸ் அடையும் பெண்களுக்கு( 50 வயசுக்கு மேல்) உடல்நிலை மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
♥தாமதமாக மெனோபஸ் நிலையை அடையும் பெண்களுக்கு இதயம் வலுவாக இருக்க அவர்களின் உடம்பில் ஹார்மோன்கள் சீராக தூண்டப்படுகின்றது. இதனால் அவர்களின் உடல்நிலை எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.
♥ஆனால் விரைவில் பூப்பெய்தும் பெண்கள் (12 வயதிற்கு முன் ) அவர்களின் இதயம் மற்றும் கருப்பையில் பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது
0 Comments
Thank you