♥கணவன் மனைவிக்கு இடையில் உள்ள முடிச்சு அவிழ்ந்து, ஒரே வீட்டில் பெயருக்கு வாழ்வதில் என்ன இருக்கிறது? கணவன், மனைவி உறவு கசந்துவிடாமல் எப்பொழுதும் ஃபிரஷ்ஷாக உணர,
♥இருவரும் தினமும் ஏதாவது ஒரு விஷயத்துக்காக ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளுங்கள். அது, ரசம் நன்றாக இருந்தது என்றோ, காய்கறிகளைச் சரியாக நறுக்கினீர்கள் என்றோ இருக்கலாம்.
♥எதிர்பாராத அணைப்பு, முத்தம் இருவரையும் அன்புத் தூண்டிலில் சிக்கவைக்கும். இதை இருவரும் பின்பற்றுங்கள்.
♥ஒருவரது குறையை எந்தச் சூழலிலும் மற்றவர் குறிப்பிட்டுப் பேசக் கூடாது. இது, மனதில் கசப்புக்கான விதைகள் பரவாமல் தடுக்கும்.
♥ஒருவர் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லத் தொடங்கும்போது, மற்றவர் காதுகொடுத்து கேட்க வேண்டும். தன் பேச்சுக்கு மதிப்புள்ள இடத்தில் நம்பிக்கை பலப்படும்.
♥ தாம்பத்தியத்தில் ஒருவருக்கு விருப்பம் இல்லாதபோது, மற்றவர் தொந்தரவு செய்ய வேண்டாம். இருவருக்கும் தேவையான ஒன்று என்பதால், மற்ற பிரச்னைகளை மறந்து இதற்கும் நேரம் ஒதுக்குங்கள்.
♥ஒரே மாதிரியான வாழ்க்கை முறை போரடிக்க செய்யும். பிடித்த இடங்களுக்குச் செல்ல திட்டமிடுங்கள். உங்கள் வாழ்வின் ஸ்டைலையும் அவ்வப்போது மாற்றிக்கொள்ளுங்கள்.. உணவு, உடை உட்பட. வாழ்வதன் சுவாரஸ்யம் கூடும்.
0 Comments
Thank you