♥ஏழ்மையை ஏளனம் செய்யாதே!
♥நான் அலுவலகம் செல்லும் வழியில், அரசு மகளிர் கல்லூரியும், தனியார் மகளிர் கல்லூரி ஒன்றும் உள்ளது. நான் செல்லும் பேருந்தில், வழியெங்கும், இரண்டு கல்லூரியை சேர்ந்த மாணவியரும் பேருந்தில் ஏறுவதுண்டு.
♥அரசு கல்லூரி மாணவியருக்கு, அரசின் சலுகையால், இலவச பாஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதில், ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் என்ன கஷ்டம் என்று புரியவில்லை. அரசு கல்லூரி மாணவியரிடம் மட்டும், 'பாஸை எடு...' என, விரட்டுவதும், 'பாஸ் தானே... எழுந்து இடம் கொடு...' என, மிரட்டுவதும், ஸ்டாப்பை விட்டு தள்ளி, பேருந்தை நிப்பாட்டுவதும், தாங்க முடியவில்லை.
♥தனியார் கல்லூரி மாணவியரின் உடையையும், ஆங்கிலத்தையும் பார்த்து, பணிவு காட்டுவது கூடுதல் எரிச்சல். பள்ளி மாணவ, மாணவியரிடமும், இதே நிலைதான். கல்வி என்பது அழியாத செல்வம். அது, அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், ஏழை, எளிய மக்களுக்கு அரசு பல சலுகைகளை வழங்கி, கல்வி கற்க ஊக்கப்படுத்துகின்றது.
♥பேருந்து நடத்துனர்களே... இதில் எத்தனையா பேர் நாளைய டாக்டர்களாகவோ, இன்ஜினியர்களாகவோ, அரசு ஊழியர்களாகவோ ஆகி, வீட்டையும், நாட்டையும் மேம்படுத்த போகின்றனர் என்பதை மனதில் வைத்து, ஏழ்மையை, ஏளனம் செய்வதை நிறுத்துங்கள்.
0 Comments
Thank you