♥மனைவி
♥என் பிரியமான பிரியம் !
என்னுள் பிரிவில்லாத இதயம் !
என் அனைத்துமான
அன்பு ஆத்மா!....
♥உயிரென்றாலும் பிரிவு உண்டு ,
உணர்வென்றாலும் மாற்றமுண்டு ,
உலகென்றாலும் அழிவுண்டு ,
அதனால் ஆத்மா என்றேன் ..
♥அத்தனையும் இழந்தாலும்
அரவணைப்பவள் அவள் ...
என்னை என்னவென்று
எனக்குள் உணர்த்தியவள் அவள்....
என் ஒட்டுமொத்த உணர்வுகளின்
ஒற்றை பாதுகாவளி அவள்.
♥என் இமைவரம்புகளில்
நீர்த்துளிகள்
எட்டிப் பார்க்கும் முன்பே
தொட்டுத் துடைத்தவள் அவள்....
இத்தனைக்கும் இறைவன்
படைத்தனுப்பிய அவள்..
♥ தன்னை மறந்து
என்னையே நினைந்து
என் நேசிப்பை சுவாசிக்கும்
என் கவியான உயிரவள்.....
"மனைவி மனதின் துணைவி"
0 Comments
Thank you