HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

தோழியாய், காதலியாய், மனைவியாய்,தாயாய் திகழும் பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்?

♥தோழியாய், காதலியாய், மனைவியாய்,
தாயாய் திகழும் 
பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்?

♥#முதலில்_தோழி…
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். இதேபோல், நல்ல தோழி அமைவதும் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்லலாம்.
ஒன்றும் தெரியாத முட்டாளையும்கூட முதல்வனாக்கிவிடும் பவர் தோழிக்கு உண்டு. 

♥அப்படிப்பட்ட தோழியிடம் நாம் எப்படி பழகலாம்?

♥ நமது சமுதாயச்சூழலில் பெண்ணுக்கு ஆணைப் போன்ற முழு சுதந்திரம் இன்னும் வழங்கப்படவில்லை. தோழியாக பழக வேண்டும் என்றால்கூட ஒரு பெண் சமுதாய கட்டுப்பாடுகளைப் பற்றியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. வாலிப பிரச்சினை என்று ஒன்று வரும்போது மிகுந்த பாதிப்புக்கு ஆளாகுபவள் பெண்ணே! அதனால், அவளது பெண்மைக்கு இழுக்கு ஏற்படாத வகையில் பழக வேண்டும்.

♥ நட்பு காதலாக மாறலாம். ஆனால், காதல் நட்பு ஆக மாறுவது பெரும்பாலும் முடியாத செயல்தான். அதனால், தோழியை நீங்கள் காதலிக்கும்பட்சத்தில், அவளும் உங்களை விரும்புகிறாளா என்பதை அறிந்து, அதன்பின் மேற்கொண்டு அதுபற்றி பேசவும்.

♥உங்களுக்கும், தோழிக்கும் திருமணம் ஆன நிலையில், தோழியின் கணவர் அனுமதிக்கும்பட்சத்தில் மட்டுமே உங்கள் நட்பை தொடரலாம். அதுவும், ஒரு குடும்ப நண்பராக!

♥திருமணத்திற்கு பிறகு, நேரில் பார்த்தால் மட்டும் நட்பை புதுப்பித்துக் கொள்வோம். மற்ற சூழ்நிலைகளில் வேண்டாம் என்று உங்கள் தோழி கூறினால், அதை பெருந்தன்மையோடு ஏற்று செயல்படுத்துங்கள். எங்கள் நட்பை எப்படி கொச்சைப்படுத்தலாம்? என்று கேட்டு, உங்கள் தோழி வாழ்க்கையை பாழாக்கிவிடாதீர்கள்.

♥கடைசியாக ஒன்று, உங்கள் தோழியையும் உங்கள் சகோதரிபோல் பாவித்து பழகுங்கள். அப்போது, உங்கள் நட்புக்கு நிச்சயம் களங்கம் வராது என்று சர்டிபிகேட் கொடுக்கலாம்.

♥#அடுத்து_காதலி…
இன்று காதலிக்காதவர்களே கிடையாது. ஆணும், பெண்ணும் கண்களால் மோதிக்கொண்டாலே அங்கே யாராவது ஒருவரிடத்தில் காதல் தீ பற்றிக்கொண்டு விடுகிறது.

♥இன்னொரு மறுக்க முடியாத உண்மை; டைம் பாஸாக வேண்டும் என்பதற்காகவும் சிலர் காதலிக்கிறார்கள். இருவருக்கும் திருமணம் ஆகும்வரை பேசுவோம், பழகுவோம், ஊர் சுற்றுவோம். திருமணம் ஆகிவிட்டால் நீ யாரோ, நான் யாரோ என்று போய்விடுவோம் என்று தங்களுக்குள் அக்ரிமென்டே போட்டுக்கொள்கிறார்கள். 

♥உங்கள் காதலி உண்மையான காதலியாக இருந்தால், அவளிடம் எப்படி பழகலாம்?

♥அவள் உங்களின் வருங்கால மனைவி என்பது உறுதியாக தெரிந்தால் மாத்திரமே காதலியுங்கள். இல்லையென்றால், பழகியவை எல்லாம் கனவென்று நினைத்து ஒதுங்கிவிடுங்கள். இதில் தப்பே இல்லை. காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, கடைசியில் கழற்றிவிட்டு ஒரு பெண்ணின் சாபத்தை சம்பாதித்துக் கொள்ளாதீர்கள்.

♥உங்கள் காதல் சைவக் காதலாக இருக்கட்டும். தவறான எண்ணத்தில் கை வைத்து விடாதீர்கள். நாளை, நீங்கள் கணவன்-மனைவி ஆகும்போது, “ச்ச்ச்சீசீ! அப்படியா நடந்து கொண்டோம்?” என்று அருவெறுப்பாக யோசிக்க வேண்டியது இருக்கும்.

♥காதலியுடன் மனம் விட்டு பேசுங்கள். எதிர்காலம் பற்றி திட்டமிடுங்கள். முறையாக, இருவர் வீட்டிலும் காதலுக்கு ஒப்புதல் வாங்கிக்கொள்ளுங்கள். காலாகாலத்தில் திருமணம் செய்துகொள்ளுங்கள்.

♥மொத்தத்தில் உங்களுக்காக அவள் என்றும், அவளுக்காகவே நீங்கள் என்றும் எப்போதும் நினைத்திருங்கள்.

♥#அடுத்ததாக_மனைவி…
பிறந்த சொந்தங்களை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு நம்மோடு, நமக்காக வாழ வருபவள். அவளை மகாலெட்சுமி என்றே போற்றுங்கள். அதில் தவறே இல்லை.

♥உங்களில் ஒருத்தி, உங்களுக்காக ஒருத்தியாக இருக்கும் அவளிடம் எப்படி பழகுகிறோம் என்பது முக்கியமல்ல. எல்லா விஷயங்களிலும் எந்த அளவுக்கு அவளை சந்தோஷமாக வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

♥அதை புரிந்துகொண்டு நீங்கள் செயல்பட்டால் அவள் உங்களுக்கு நல்ல மனைவிதான். நீங்களும் அவளுக்கு நல்ல கணவன் தான்....!❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

Post a Comment

0 Comments