❣️பார்ப்பவருக்கு அது பாரம் ...
சுமை தந்தவனுக்கோ அது வைரம் ...
சுமப்பவளுக்கே அது வரம் !
👉ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு!
👉ஒரு பிடி சோற்றைக் கூட - அதிகமாய்
உட்கொள்ளாத வயிறு..!
👉ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும்
உலக அதிசயம்..!
👉எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள்
வந்தாலும்..கருவறையை விடப் பாதுகாப்பான
அறையை காண முடியுமா அல்லது காட்டதான் முடியுமா ?
👉இத்தகைய பாதுகாப்பான இருப்பை குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?
👉இறைவனின் வல்லமைக்கு இதனை விட
சான்று வேண்டுமா..?
👉பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்துப்
போகிறது..!
👉பத்து மாதம் சுமந்தாலும்
கருவறை கனப்பதில்லை..!
👉வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள்
ஆனால்
இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..!❣️🙏❣️
👉மனைவியாய் வளரும் உறவு
தாய்மையில்தான் தன்னிறைவு பெறுகிறது..!❤️
👉தாய்மையின் மகத்துவத்தை எத்தனை
தத்துவமாயும் தத்ரூபமாயும் சொல்லலாம்.
பெண்மைக்கே உரிய பேரியல்பு அது !
பேரிட முடியா பெரும்பாக்கியம் ..பெண்மையின் மகத்துவம் "தாய்மை எனும் பெரும் பேறு "!
❤️🙏❤️
0 Comments
Thank you