HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ராஜேஷ் ஒரு வங்கின் கிராமத்து பிராஞ்ச் அதிகாரி.

♥ராஜேஷ் ஒரு வங்கின் கிராமத்து பிராஞ்ச் அதிகாரி. அவனிடம் அன்று ஒரு ஆதிவாசி ஆள் லோன் கேட்டு வந்தார்.

லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டான். ஏன் கடன் கேக்கிறீங்க “எதுக்காகப் பணம் வேணும்…?”

♥அந்த ஆதிவாசி ஆள் பதில் சொன்னார். “கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…!”

♥“அடமானமாய் என்ன தருவீங்க…?” எத வச்சு நான் லோன் தரமுடியும்..

♥ஆதிவாசி ஆள் லேசாய் குழப்பத்துடன் கேட்டார். “அடமானம்னா என்ன..சார்?”.

♥“நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தாத் தான் பேங்க் பணம் கொடுக்கும். அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்…!”

♥ஆதிவாசி ஆள் சொன்னார்.
“கொஞ்சம் நிலம் இருக்கு… ரெண்டு குதிரை இருக்கு…நாலு ஆடு இருக்கு. ஐந்து கோழி இருக்கு.. எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்…!”.

♥ராஜேஷ் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாகத் தர ஏற்பாடு செய்தான்.

♥சில மாதங்கள் கழிந்தது.
அந்த ஆதிவாசி மீண்டும் பேங்கிற்கு வந்தார். தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுக்கச் சொன்னார்.
பைசா பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில் செய்தார்.

♥ராஜேஷ் ஆச்சர்யத்துடன் கேட்டான்.
“கடன் எல்லாவற்றையும் சீக்கிரமா கட்டியாகிவிட்டது. லாபம் வந்திச்சா மாட்டால... …?”

♥அந்த ஆதிவாசி உற்சாகமாய்ப் பதில் சொன்னார். “லாபம் இல்லாமலா…? லாபம் நல்லாவே  கிடைச்சது .. மாடும் பெருகிடுச்சு... 

 ♥ஆர்வத்துடன் கேட்டான். பணம் 
“ எல்லாம் என்ன செய்தீர்கள்..?”. இங்கே வைப்பிலிடவில்லையே..

♥“என்ன செய்யறது…பத்திரமா பொட்டில போட்டு வச்சிருக்கேன்…!”.

♥ராஜேஷ் யோசித்தான்.
‘இந்த மாச டார்கெட்க்கு சரியான ஆளாக் கிடைச்சுட்டான்…!’ என்று நினைத்தபடியே,”ஏன் நீங்க பணத்தை எங்க பேங்க்ல பிக்சட் டெபாசிட் பண்ணலாமே…?” வட்டியோட திரும்ப தருவம் என்றான்.

♥ஆதிவாசி கேட்டார்.
“டெபாசிட்னா என்ன…?”.

♥ராஜேஷ் விளக்கமாய்ப் பதில் சொன்னான். “நீங்க உங்க பணத்தை வங்கீல போட்டு வச்சா… உங்க சார்பா பேங்க் உங்க பணத்தப் பார்த்துக்கும். உங்களுக்கு எப்ப எப்ப பணம் தேவையோ அப்ப அப்ப நீங்க பணத்தை எடுத்துக்கலாம்…!”.

♥கேட்டுக் கொண்டிருந்த அந்த ஆதிவாசி நபர் சற்றே சேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டார்.

♥“அடமானமாய் என்ன தருவீங்க…?”.
எத வச்சு நான் என் பணத்தை உங்ககிட்ட தர்றது....

Post a Comment

0 Comments