♥நண்பன்: டேய் அம்மா அவசரமா கால் பண்ணி இருந்தாங்கடா...
நான் : யார்ட அம்மா டா..?
♥நண்பன் : நம்ம அம்மா டா..? வேறுயார்ட அம்மா...
♥நான் : (அவன் எப்படி இருந்தாலும் என் அம்மா உன் அம்மா என்று சொல்லபோவது இல்லை, என்று கொஞ்சம் சுதாகரித்துக்கொண்டு) எங்கிருந்துடா..?
♥நண்பன் :உன் ஊர்ல... அதான் தாராபுரத்தில் இருந்து..!
♥நான்: (என் அம்மா என்று தெரிந்தாச்சு ) அப்படியா என் போன் நம்பர் இருக்கே அம்மாகிட்ட உனக்கு ஏன் பண்ணாங்க என்ன விசயமாம்..?
♥நண்பன் : உன் போனுக்கு ட்ரை பண்ணிடே இருந்தாங்களாம், நாட் ரீச்சபள் ஆக இருந்துச்சாம் அதான் எனக்கு பண்ணி உன்ன அவசரமா கால் பண்ண சொன்னாங்க..!
நான் : என்னனு ஏதாச்சும் சொன்னாங்களா டா.....?
♥நண்பன்: முதலில் நீ கால் பண்ணி பேசு. என்ன அவசரமோ...
நான்: ம்ம் சரிடா... (கால் பண்றேன்)
♥அம்மா: மகனே நான் இப்போ இங்க ஆசுபத்திரியிலிருந்து பேசுரேன்டா அப்பாக்கு திடீர்னு முடியல.. இப்ப சரியாச்சு வீட்டுக்குப்போயிட்டு விபரமாகக் பேசுரேம்பா, உன் போன் வேலை செய்யல அதான் தம்பிக்கு கால் பண்ணேன் அவசரமா பணம் தேவை ஹாஸ்பிடல் போக உடனே உன்னய அனுப்ப சொல்லி சொல்ல சொன்னேன், பணம் வந்து குடுத்துட்டாங்கபா.
நான் வீட்டுக்கு போய் போன் பண்றேன்.
♥நான் பணம் அனுப்பலயேம்மா என்று சொல்ல முதல் அம்மா போனை வைத்துவிட்டார்.
♥நான்: (போனை கட் பண்ணிவிட்டு இவனிடம்) எப்போடா பணம் அனுப்பின? எப்படி? என்கிட்டே சொல்லவே இல்ல?
♥நண்பன்: சொல்லிட்டு செய்ய இதென்ன கல்யாணமா கடமை டா, நீ போய் ஆகவேண்டிய வேலையை பாரு டா .
♥நான் : நான் பேச்சின்றி அவன் கையை பற்றி விட்டு நகர்ந்தேன்..!
♥பெறாத பிள்ளைகளையும், பெறப்படாத பெற்றோர்களையும் அள்ளி அள்ளித் தருவது நட்புதான்..!
0 Comments
Thank you