♥கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் முதல் நாள் ஒரு சிறிய தகராறு. இதனால் ஒருவரோடு ஒருவர் பேசுவதை நிறுத்திவிட்டனர்.
மறு நாள் கணவன் தொழில் விசயமாக வெளிஊருக்கு அதிகாலை 4 மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது.
♥மனைவியிடம் நேரடியாக சொல்ல சுயமரியாதை இடம்தரவில்லை.
அதிகாலை 4 மணிக்கு புறப்படவேண்டும் என்னை எழுப்பிவிடு என ஒருதாளில் எழுதி மனைவியின் தலையணையின் அருகே வைத்துவிட்டு மனைவி காலையில் எழுப்பிவிடுவாள் என்ற நம்பிக்கையில் தூங்கிவிட்டான்.
♥காலையில் திடுக்கிட்டு எழுந்து நேரத்தை பார்த்தால் மணி 6. பயங்கர கோபத்தோடு மனைவியை பார்த்தான். ஏன் என்னை எழுப்பிவிடவில்லை என கோபமாக கேட்டான்.
♥மனைவி அமைதியாக கணவனின் தலையணையை காட்டினாள். அதன் அருகில் ஒரு தாளில் மனைவி எழுதி வைத்திருந்தாள் ” மணி 4 ஆகிவிட்டது எழுந்திருங்கள்” என்று!
♥இந்த கதையில் சுய மரியாதையை காப்பாற்ற வேண்டி சீட்டில் எழுதி வைத்த கணவன், காலை தாமதமாக எழுந்தவுடன் கோபத்தில் சுய மரியாதையை மறந்து ஏன் என்னை எழுப்பி விடவில்லை என்று கேட்கிறார்.
♥முதல் நாள் இரவு கொஞ்சம் தனது சுய மரியாதையை மறந்து மனைவியிடம் எழுப்பிவிட சொல்லி இருந்தால் பயணம் தடைபட்டு இருக்காது.
♥இதே தவறைத்தான் இன்று நம்மில் பலரும் செய்து கொண்டுஇருக்கிறோம். முதலில் சுய மரியாதையை யாரிடம் எங்கே காட்ட வேண்டும் என்று தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
♥மனைவி என்பவள்
உன்னில் ஒரு பாதி
உன் உயிரில் ஒரு பாதி
உன் உடலில் ஒரு பாதி
அப்படிப்பட்ட மனைவியிடம் கொஞ்சம் ஈகோ வை மறக்க பழகுங்கள்.
♥இது ஆண்களுக்கு மட்டுமல்ல , பெண்களும் இதே தவறைத்தான் செய்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது இருவருமே தான்
0 Comments
Thank you