♥நேர்மறை... எதிர்மறை எண்ணம்...!!
♥ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒருவன் போதை பழக்கம் உள்ளவன். எப்போதும் குடும்பத்தில் இருப்பவர்களை மிரட்டி பணம் வாங்கி குடித்துக்கொண்டே இருப்பான். பிறருக்கு தொல்லை கொடுத்து இன்பம் பெறுவான்.
♥மற்றவன் நல்லவனாக, சமூகத்தில் மதிக்கப்படுபவனாக, நல்ல குடும்ப தலைவனாக இருந்தான்.
♥அருமையாக குடும்பத்தை பராமரித்து வந்தான். ஊரில் உள்ளவர்களுக்கு வியப்பு. ஒரே தகப்பனுக்கு பிறந்து, ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இரு குழந்தைகளில் ஒன்று ஊர் போற்றும் நல்லவனாகவும், மற்றொன்று ஊர் தூற்றும் கொடியவனாகவும் இருக்க காரணம் என்ன? என்று.
♥ஒரு பெரியவர் குடிகார மகனையும், நல்ல குடும்ப தலைவனையும் இப்படி கேட்டார். உன் நடத்தைக்கு யார் காரணம்? என்று... இருவரும் ஒரே பதிலைதான் கூறினார்கள். என்னுடைய நடத்தைக்கு காரணம் என் அப்பா என்று.
♥உன் அப்பா என்ன செய்தார்? என்று குடிகார மகனை கேட்டபோது எனக்கு விபரம் தெரிந்ததில் இருந்து என் அப்பா இரவிலும், பகலிலும் குடித்துக்கொண்டே இருப்பார். குடும்பத்தினரை தொந்தரவு செய்துக்கொண்டே இருப்பார்
♥அடிகளுக்கு பஞ்சமில்லை... அவரின் மகனாகிய நான் வேறு எப்படி இருப்பேன்? அதனாலேயே நானும் குடிகாரனாகி விட்டேன். மோசமான தகப்பனின் மகனான நான் மோசமாகி விட்டேன். என் நடத்தைக்கு என் தந்தையே முழுக்காரணம் என்றான்.
♥பின்னர் உன் அப்பா என்ன செய்தார்? என்று நல்ல மகனாக இருப்பவனை கேட்டார். அதற்கு அவன் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்தே என் தந்தை இரவிலும், பகலிலும் குடித்துக்கொண்டே இருப்பார்.
♥குடும்பத்தினரை தொந்தரவு செய்துக்கொண்டே இருப்பார். அடிகளுக்கு பஞ்சமில்லை... அதனாலேயே நான் குடிக்கக்கூடாது.
♥குடிகாரனாகி விடக்கூடாது. மோசமான தகப்பனின் மகனான நான் மோசக்காரனாக இருக்காமல் நல்லவனாக இருக்க வேண்டும் என எண்ணினேன். அதனால் என் நடத்தைக்கு என் தந்தையே முழுக்காரணம் என்றான்.
♥நீதி :
எந்த ஒருவரின் நடத்தையிலும் நேர்மறை மற்றும் எதிர்மறை நிகழ்வுகளும் உண்டு... நாம் அதில் எதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தான் நமது செயல் உள்ளது
0 Comments
Thank you