#உண்மை_சம்பவம்_இப்படியும்_நடக்கிறது
♥படித்துக்கொண்டிருந்த அவளுக்கும், கல்லூரி மாணவர் ஒருவருக்கும் காதல் வந்தது. இருவரும் படித்துக்கொண்டே ஊர் சுற்றினார்கள். படிப்பைவிட, காதலில் அவள் ஆர்வம் காட்டினாள். விளைவு பொதுத் தேர்வில் தோல்வியை தழுவிவிட்டாள். காதலனோ கல்லூரி படிப்பில் மிக கவனமாக இருந்தான்.
♥தேர்வில் தோல்வி அடைந்ததும், வீட்டிலே முடக்கப்பட்டாள். இருவரும் சந்திக்கும் வாய்ப்புகள் குறைந்தன. தொடர்ந்து சந்திக்க என்ன வழி? என்று இருவரும் திட்டம் தீட்டியபோது, காதலன் சொன்னான், ‘நம்ம ஊரில் புதுசா ஒரு கம்ப்யூட்டர் சென்டர் திறந்திருக்கிறது. இரவு ஏழு மணிக்கு மேல் அங்கு மாணவிகள் வருவதில்லை. அதனால் 7 மணிக்கு மேல் வரும் மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்தில் கற்றுக்கொடுக்கிறார்கள். உன் வீட்டில் அதற்கு அனுமதி வாங்கு. வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் மட்டும் வகுப்புக்கு போய்விட்டு, மீதி நாட்களில் இரவிலும் ஊர்சுற்றலாம்..’ என்று காதலன் சொன்ன யோசனை அவளுக்கு உடனே பிடித்துவிட்டது.
♥பெற்றோரிடம் அனுமதி வாங்கி, அந்த கம்ப்யூட்டர் சென்டரில் சேர்ந்தாள். அவனும் சேர்ந்தான். காதல் சந்திப்புக்கு மிக ஏற்றதாக அந்த நேரம் அமைந்தது. அந்த ஊர் சிறு நகரம். காட்டுப்பகுதிகளை உள்ளடக்கியது. பார்க், பீச், ஓட்டல் என்று சந்திக்க முடியாது. காட்டுக்குத்தான் போகவேண்டும். காட்டுக்கு போக ஒரு பெண் சம்மதிப்பது என்பது, எல்லைமீற அனுமதி கொடுப்பது போன்றதாகும்.
♥காட்டுப்பகுதிக்கு போனார்கள். எல்லைமீறினார்கள். இரண்டு மாதங்கள் கடந்ததும் அவள், வாரிசு வளரும் விஷயத்தை அவனிடம் சொல்ல, அவனோ ‘உனக்காகத்தானே நான் அங்கே வந்தேன். படித்துக்கொண்டிருக்கிற என்னால் கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாது. நானே ஒரு தெண்டச்சோறு. அழுது சீன் போடுற வேலை எல்லாம் வைச்சுக்காதே! புத்திசாலித்தனமா சிந்தனை பண்ணு. வா எங்கேயாவது போய் கருக்கலைப்பு செய்திடலாம்’ என்றான்.
♥சம்மதித்தாள். நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் அதற்காக இருக்கும் மருத்துவமனையை தேடி அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, பஸ்சில் இன்னொரு பெண் அவர்களை சந்தித்தாள்.
♥மாணவியின் முகத்தில் தெரிந்த வாட்டத்தை குறிப்பால் உணர்ந்த அவள், ‘அந்த ஆஸ்பத்திரிக்கு அதுக்குதானே போறீங்க! நான் ஒரு மாற்று வழி சொல்றேன். அதை அழிக்காதே. இன்னும் ஏழே மாதம்தானே! நகரத்தில் ஆஸ்டலில் தங்கி வேலைபார்க்கிறேன்னு சொல்லிவிட்டு, என் வீட்டில தங்கிக்க. நான் நல்லா உன்னை பார்த்துப்பேன். கண்ணை மூடித்திறக்கிறதுக்குள்ளே, ஏழு மாசம் ஓடிடும். அழகாக ஒரு குழந்தையை பெத்துப்போடுவே. அந்த குழந்தையை என்கிட்டே கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கிறேன். சம்மதமா?’ என்றாள்.
♥அவள் திடுக்கிட..! காதலனோ கூலாக ‘இதுகூட நல்லதாகத்தான் தெரியுது! ஏழு மாதத்தில் ஒரு லட்சம் வருமே’ என்றான்.
♥அப்போதுதான் அவளுக்கு, அந்த பெண்ணுக்கும்– தனது காதலனான இளைஞனுக்கும் இதில் ‘தொழில் கூட்டணி’ இருப்பது புரிந்தது.
♥தப்புக்கு மேல் பெருந்தப்பு செய்ய வேண்டாம் என நினைத்த அந்த பெண், வீட்டிற்கு வந்தாள். அம்மாவிடம் விவரத்தைகூறி காதும் காதும் வைத்ததுபோல் கருக் கலைப்பு செய்துவிட்டு, தோற்றுப்போன பாடத்தை மீண்டும் எழுதத் தொடங்கியிருக்கிறாள்.
♥இப்படியும் சில கும்பல்கள் செயல்படுவதை நீங்களும் தெரிஞ்சுக்கணுங்க!
0 Comments
Thank you