என்னப்பா மக பிறந்திருக்காளா???
அந்த இளைஞன் நகரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான். அவன் கிராமத்தை சேர்ந்தவன். அவனுக்கு பெண் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவனது சொந்த கிராமத்துக்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்த வசதியான பெண் ஒருத்தியை அவனுக்கு பேசி முடித்தார்கள்.
என்னடே செருப்பு கடைல நிக்க??
மவள கான்வென்டுல சேர்த்தேன்.....புது ஷூ வாங்க வந்தேன்..
என்னடே பத்திரிக்கை ???
.
மவா ஆளாயிட்டான்னே, வீட்டுக்காரியும் மச்சானும் சடங்கு நடத்த சொல்லிட்டாங்க உள்ளூர் மண்டபத்துல வாடகை கம்மி ..வந்திருங்கண்ணே.
என்னடே செல் கடை பக்கம்??
மவ கூட படிக்க புள்ள செல்லு வச்சிருக்காம்,அவளுக்கும் வாங்கிட்டேன்..
என்னடா மெடிக்கல் பக்கம் வந்திருக்க??
மவளுக்கு வயித்த வலி, வீட்டுக்கு தூரமாம், வீட்ல போன் பண்ணி செவன் அப்பும், நாப்கினும் வாங்க சொன்னா வந்தேன்..
ராத்திரி ஒரு மணிக்கு என்னடே இரயில்வே ஸ்டேஷன்ல நிக்க???
என் மவா காலேஜ்ல டூரு போயிட்டு வாரா கூப்பிட நிக்கேன்..
என்னடே ஆசாரி கிட்ட ரொம்ப நேரம் பேசிட்டு இருக்க??
என் வீட்டுக்காரி இறந்த பிறகு அவா நகை பத்து பவுன் இருந்தது,
அதுல மவளுக்கு ஒரு காசுமாலை பண்ண வந்தேன்..
மவா கல்யாணம் முடிச்சு போயிட்டாளே, மனைவியும் இல்லையே சாப்பாட்டுக்கு என்னடே பண்ற??
அந்த ஐயரு ஓட்டல்ல வாட்ச் மேனா இருக்கேன், மூணு நேரம் அங்க சாப்டுவேன்..
என்னடா ஓட்டல் வேலைக்கு போவலையா?? நகை கடைல நிக்க??
பேத்திக்கு திருச்செந்தூர்ல முடி எடுக்காங்க, கம்மல் வாங்க வந்தேன்...
என்ன வாட்ச்மேன், எதுக்கு நாளைக்கு லீவு???
பேத்தி பெரியமனுஷி ஆகிட்டா, நாளைக்கு சடங்குக்கு போறேன்...
இது தான் பெண் பிள்ளைகளை பெற்றவர்களின் வாழ்க்கை..
பெண் பிள்ளைகள் ஒரு வீட்டின் தெய்வம்.. — feeling proud.
0 Comments
Thank you