அதர்மம் தலை தூக்கும் போது
கடவுள் அவதரிப்பார்
என்கிறது வேதங்கள்...
மனித குலம் செய்த
இமாலய தவறுகள்....
1)நச்சு வாயுக்களின் வெளியீட்டால்
வாயு மாசடைவு…
ஓசோன் படலம் சிதைவு…
பால் வித்தியாசம் கூட பாராமல் கட்டியணைத்து அன்பை பரிமாறும் நாகரிகம்…
2)பொது இடம் என்றும் பாராமல்
எச்சில் துப்புதல்…
அருகில் ஒருவர் இருப்பதை
கூட பாராமல் இருமுதலும் தும்முதலும்…
3)யாருக்காக உழைக்கிறோமோ அவர்களுக்காகவே நேரம் ஒதுக்காமல் ஓடித்திரியும் இயந்திர வாழ்க்கை…
4)வீட்டுக்குள்ளேயும் செருப்போடு நடமாடும் நாகரிகம்…
5)உணவு முறை மறந்து அவசரத்துக்காகவும் நாகரிகத்துக்காகவும் சுவைக்காகவும் முறையற்ற துரித உணவுகள்…
6)சுவைக்காகவும் வியாபாரத்துக்காகவும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி விலங்குகள்…
உலகம் எங்கேதான் செல்கிறது என்று தடுமாறி, கேள்வி எழும் நேரத்தில் திடீர் மாற்றம் போல வந்த Corona வைரஸ்....
வெளிப்படையாக பார்க்கும் போது உயிர்களை கொன்று குவிக்கும் அரக்கன் போல தோன்றினாலும் ஆழமாக யோசிக்கும் போது…
மொத்த உலகமும் வீட்டை விட்டு வெளிவர பயந்து வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் நேரத்தில்... வாகனங்களும் தொழிற்சாலைகளும் முடங்கி போய் இருக்கும் நேரத்தில்... வெளி மண்டலம் தன்னை தானே
சீர் செய்துகொள்கிறது.
மறைந்து போன தமிழ் பண்பாடு வணக்கத்தின் மூலம் மெல்ல மெல்ல வெளிப்படுகிறது.
காலம் காலமாக சில மூளைகளுக்குள் ஏறாத நாகரிகம் ஊசி வைத்து ஏற்றியது போல திடீரென ஏறி பொது இடத்தில் உமிழாமல் இருக்கவும் தும்மல், இருமலின் போது கைக்குட்டை பயன்படுத்தவும் சொல்லிக்கொடுத்தது.
ஆயிரக்கணக்கான அப்பாக்கள் பிள்ளைகளுக்கு உணவூட்டி அவர்களோடு விளையாடுகின்றனர்.
செருப்புகளோடு தூர பயணங்களுக்கு அணிந்த ஆடைகளும் வீட்டுக்கு வெளியே காத்திருக்கின்றன தம்மை சுத்தம் செய்து கொள்ள.
கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது நம் பாரம்பரிய கிருமிநாசினிகளான மஞ்சளும் வேப்பிலையும்...
நாகரிகம் தேடி ஓடிய மனிதன் கையில்.
துரித உணவுக்கெனவே பழக்கப்பட்ட நாவுகள் தம்மை பழக்கப்டுத்திக் கொள்கின்றன அம்மா கையால் சத்துணவு சாப்பிட.
உலகமே அதிர்ந்து போகுமளவு காட்டுத்தீயை தந்தும் அசராத விந்தை மனிதன் இன்று ஒரு விலங்கை தீண்டவே பயந்து கிடக்கிறான்.
இனியேனும் காடும் விலங்குகளும் காப்பாற்றப்படலாம்.
தொலைந்து போயிருந்த மனிதம் தன்னை புதுப்பித்து கொள்கிறது.
இடைவெளியே இல்லாமல் பூமியை தொந்தரவு செய்ததன விளைவு இன்று பொறுமை இழந்து பூமி வெடித்து கிளம்பி விட்டது தன்னை புதுப்பித்துக்கொள்ள அவகாசம் கேட்டு....
இது வியாதியா அல்லது பூமியை தூசு தட்ட கடவுளின் ஏற்பாடா????
நோயிலிருந்து மக்கள் தம்மை காப்பாற்றி வெளிவரும் போது பூமியும் தன்னை புதுப்பித்துக்கொள்ளும் போலும்...
எல்லாமே ஒரு காரணகாரியத்தோடுதான்
நடக்கிறது...
சர்வமும் அவன் செயல்....
சர்வேஷ்வரா...
0 Comments
Thank you