HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

அந்த இளைஞன் நகரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான்.

♥அந்த இளைஞன் நகரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான். அவன் கிராமத்தை சேர்ந்தவன். அவனுக்கு பெண் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவனது சொந்த கிராமத்துக்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்த வசதியான பெண் ஒருத்தியை அவனுக்கு பேசி முடித்தார்கள். 

♥பெண் தரப்பில் அவசர அவசரமாக திருமணம் நடத்த விரும்பினார்கள். அதற்கும் மணமகன் தரப்பினர் சம்மதித்தார்கள். அந்த பெண்ணின் குடும்பம் மிக வசதியானது.

♥திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்துகொண்டிருந்தது. அந்த பெண் 16 வயதினிலேயே பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு, கார் டிரைவர் ஒருவரோடு காணாமல் போனவள். இரண்டு மாதங்கள் கழித்து, வெகு தூர பகுதி ஒன்றில் இருந்து கண்டுபிடித்து, போலீஸ் துணையோடு மீட்டு வந்தார்கள். அதன் பிறகு மூன்று வருடங்களாக அந்த பெண்ணை வீட்டுக்காவலில் வைத்திருப்பதுபோல் பாதுகாக்கிறார்கள். இப்போது அவளுக்கு 19 வயது.

♥அந்த பெண்ணை திருமணம் செய்ய இருக்கும் இளைஞனின் நண்பன் ஒருவன், அந்த பெண் வசிக்கும் கிராமத்தை சேர்ந்தவன். அவன் காதில் அந்த திருமண விஷயம் விழுந்தது. உடனே அதிர்ந்தான். ‘தனது நண்பனுக்கு, ஏற்கனவே காதல் வலையில் விழுந்த பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துவைக்கப் போகிறார்களே!’ என நினைத்தவன், கிராமத்தில் இருந்து கிளம்பி, நகரத்தில் தங்கி வேலை பார்த்துக்கொண்டிருக்கும் நண்பனைத் தேடிச் சென்றான்.

♥நண்பனின் பதற்றமான திடீர் வரவு புதுமாப்பிள்ளையாகப் போகும் இளைஞனை குழப்பியது. ‘அவசர வருகைக்கு என்ன காரணம்?’ என்று கேட்டான். அவன், ‘ரொம்ப ரகசியமான விஷயம் ஒன்றை செல்றேன்டா..!’ என்று ஆரம்பித்து, அந்த பெண்ணின் பழைய காதலையும், அவள் காதலனோடு சென்றதையும், கண்டுபிடித்து கொண்டு வந்து வீட்டுச் சிறையில் வைத்திருப்பதையும் விலாவாரியாக விவரித்தான்.

♥தெரியாத விஷயத்தை கேள்விப்பட் டதுபோல், நண்பன் ஆர்வமாக விசாரித்து ‘அப்படியா..? அப்படியா? என்று கேட்பான்..!’ என நினைத்தவனுக்கு ஏமாற்றம். அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளப்போகிறவனோ மிக அமைதியாக அதை கேட்டுக்கொண்டிருந்தான்.

♥அதனால் கோபமடைந்த கிராமத்து நண்பன், ‘ஏன்டா உனக்கு அறிவிருக்கா? வெட்கங்கெட்ட அவளை போயி கல்யாணம் பண்ணிக்க போறியே!’ என்று ஆத்திரத்துடன் வார்த்தைகளை கொட்டினான்.

♥புது மாப்பிள்ளையாகப் போகிறவனோ ரொம்ப கூலாக, ‘அவள் அப்படிப்பட்டவள்னு தெரிந்ததால்தான் கல்யாணம் பண்ணிக்க சம்மதித்தேன். நகரத்தில் சம்பாதித்து சொந்த வீடு வாங்க முடியலே! கார் வாங்குவோம்னு கற்பனைகூட செய்ய முடியலே! அதெல்லாம் வேணும்னா நான் அவளை கல்யாணம் பண்ணித்தான் ஆகணும். 

♥நான் அவளை நேரில் சந்தித்து பேசியபோது அவள் எல்லா உண்மைகளையும் கூறிவிட்டாள்... அறியாத வயது என தவறை உணர்ந்துவிட்டாள்.

♥வீடும், காரும் வாங்கித்தரதா சொல்லியிருக்காங்க! எல்லாத்தையும் வாங்கி, வாழ்க்கையை அனுபவிக்கணும். ஹனிமூனுக்கு பாரீனுக்கும் அவள் பணத்திலேயே பறக்கணும். எப்போ கசக்குதோ அப்போ, அவளுடைய பழைய காதல் பிரச்சினையை புதுசா கேள்விப்பட்டது மாதிரி ஆரம்பிச்சி, அவமானப்படுத்தி துரத்திவிட்டுடணும்! எப்படி நம்ம ஐடியா..?!’ என்றவனை பார்த்து, கிராமத்து நண்பன் கதிகலங்கி போனான்!

♥இப்படி பழைய காதல் பிரச்சினைகளை வைத்து, பெண்களின் வாழ்க்கையில் விளையாடி லாபம் பார்க்கும் புதிய இளைஞர்கள் ஒருசிலர் ஆங்காங்கே தலைதூக்கியிருக்காங்க!!

Post a Comment

0 Comments