#இரவுகள் #விடியா #பொழுதுகள் #இல்லை
எல்லா மனிதர்களுக்கும்
ஏதேதோ கவலையுண்டு!
சொல்லித்திரிவதால் மட்டும்
சோகங்கள் குறைந்திடுமோ?
அடைமழை காணா
அடவி உண்டா?
உளியில் அடிபடா சிற்பம்
உருவம் கண்டதுண்டா?
எச்சங்கள் காணா கோபுரம்
எங்கேனும் உண்டா?
தரணியை பிளந்திடா
தாவரம் உண்டா?
காலிலே காயம் காணாத
கமக்காரன் உண்டா?
தேயாத நிலா எந்த
தேசத்திலும் உண்டா?
கலைந்து போகா
கார்முகில் உண்டா?
மறைந்து போகா சூரியன் உண்டா
மரித்தே போகாத மன்னவன் தான் உண்டா?
சட்டென நினைக்கையில்
பட்டன வரும் கவிதை உண்டா?
யுத்தங்கள் காணாத தேசம் உண்டா
இரத்தங்கள் காணாத விடுதலை உண்டா
பூக்களை சீண்டாத
பூச்சி தான் உண்டா?
தாங்க முடியா சோகம் உன்னை தவிடுபொடியாக்கினாலும்
வெட்டியதும் இன்னும்
வேகமாய் வளரும் வாழை போல்
துன்பங்களை துடைத்தெறிந்து
துடிப்புடன் விடாது தொடர்வோம்.
இன்பங்கள் எட்டும் வரை...
#இரவுகள்_விடியா_பொழுதுகள்_இல்லை
#இயலா_என்றொதொரு_வார்த்தையும்_இல்லை
0 Comments
Thank you