HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

தங்கை

#தங்கை

ஏழு மணிக்கு நான் எழும்பி 
ஆடி அசைந்து வெளிக்கிட்டு
பள்ளிக்கு லேட் ஆகி கதவுக்கு வெளியில புல்லுப்புடுங்க நிக்கையில அண்ணா நிக்கிறான் எண்டு அழுதது நினைவிருக்கு!

பள்ளிக்கூடம் முடிஞ்ச பிறகு
பந்தடிக்க போகனும் எண்டு சொல்லி என் புத்தகங்களையும் சுமத்தி விடுவன்..

ஐந்தாம் ஆண்டு நீ படிக்கையில 
ஆரோ ஒருத்தன் ஆடையொட்டி முள்ளால உந்தலையில் எறிஞ்சதாம் எண்டு சொல்லி
அண்ணனிட்ட சொல்ல அடிதடி எண்டாகி
பிறின்சி வரை பிரச்சனை பிரளயமானது.
அப்ப எனக்கு வயசு பதினொன்று!

பெரிய பிள்ளை ஆன பின்னும் 
அடிதடி சண்டையில பெரிய மாற்றமில்லை
அண்ணணோட மட்டும்!

உன் பிறந்தநாளுக்கு வந்த வகுப்பு பிள்ளையள்ள அண்ணி ஆகிற அளவுக்கு யாரும் பிகரில்ல எண்டு சொல்லி அடிவேண்டி போனேனே!

பக்கத்து தெருவில இருக்கிற பிள்ளையொன்னு பார்த்து சிரிச்சுட்டு!
உடனே ஓடி வந்து உன்கிட்ட சொல்லி
கதைச்சு கிதைச்சு கரட் பண்ணி தாவன்னு
சொன்னதெல்லாம் நினைவிருக்கா?

பொறிக்கடவை அம்மன் திருவிழாவில் கால்கொலுசு வாங்க எண்டு
பொத்தி பொத்தி உண்டியல்ல காசு சேர்த்து
பள்ளிச்சுற்றுலா ஒண்டுக்கு நான் போக
பயணத்துக்கு காசு இல்லை எண்ட போது
என்கிட்ட காசிருக்கு 
எடுத்துப்போ அண்ணா எண்டவள் நீ!

தலகணிச்சண்டை வந்து
தடி எடுத்து அடி பட்டு மூக்கில குத்துவிட்டன்
பொன்மூக்கு உடைஞ்சு பொளுபொளுனு
இரத்தம் வர
வைச்ச சிலை போல வாய்மூடி நான் நிற்க
அப்பன் அடிக்கவர அண்ணாக்கு அடிக்கவேணாம் எண்டு சொன்ன.. 
அதவிட எனக்கு ஆதரவு என்ன வேணும்?

மழையில ஒரு நாள் தலை நனைஞ்சி வருகையில தாவணித்தலப்பால தலைதுவட்டி விட்டியே தங்கையே நினைவிருக்கா?

இருப்பத்தைஞ்சு வருசம் இன்னொரு தாயாய் தோழியாய் இருந்து இன்னொருத்தன் கைபிடிச்சு கொடுக்கையில ஏதோ ஒரு நெருடல் எனக்குள்ளே! 

கைபிடிச்சு கொடுத்த பின்னே கார் ஏறிபோகையில அண்ணா எண்டு என்னை
ஆரத்தழுவி அழுதியே அடியோடு சாய்ந்திட்டுச்சு ஆலமரம் போல 
அண்ணன் மனசு! 

Post a Comment

0 Comments