பெண்கள் ஆடைகளை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை ஒரு தந்தை விளக்குகிறார்.
தன் தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றபோது, மகளின் ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது.
அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் வெளியிட்டுள்ளார்.
நானும், எனது தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம்.
வழக்கம்போல்,
தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார்.
நாங்கள் உள்ளே சென்றவுடன்,
அவர் எங்களை உற்றுப் பார்த்தார்.
எங்களை அருகில் அமர்த்திக்கொண்டு, என் கண்களை நோக்கி நேராகப் பார்த்து,
#செல்ல_மகளே !!
இந்த உலகில் மி்க மதிப்பு மிக்கதாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது.
#வைரங்களை
#எங்கு_எடுப்பாய்?
பூமியின் ஆழமான பகுதியில் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன.
#முத்துக்களை
#எங்கு_எடுப்பாய்?
கடலின் ஆழமான பகுதியில் அழகான சிப்பிக்குள் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் முத்துக்கள் உள்ளன.
#தங்கத்தை_எங்கு_எடுப்பாய்?
சுரங்கத்தினுள்ளே, அடுக்கடுக்கான பாறைகளுக்குள்ளே மறைக்கப்பட்ட நிலையில்,
அதை எடுப்பத்தர்க்கு நீ மிகக் கடினமாக உழைக்க வேண்டும்.
என்னை உற்று நோக்கியவராக,
#உன்னுடைய_உடல் #புனிதமானது.
#வைரங்கள்_முத்துக்களை_விட #நீ_புனிதமானவள்.
உன் உடலை முறையாக நீ மறைத்துக்கொள்ள வேண்டும்.
பெண்களின் உடலமைப்பு என்பது இறைவன் தந்த பொக்கிஷம்.
பொக்கிஷங்களை பொத்திப் பாதுகாப்பதே அறிவார்ந்தவர் செயல்.
அதைவிடுத்து பொக்கிஷம் உள்ள வீட்டை திறந்து போட்டால்.
பொறுக்கிகளால் உங்கள் பொக்கிஷம் சூறையாடத்தான்படும்.
பொக்கிஷமாய் போற்றி வளர்த்த தாய்தந்தைக்கு அழகு என்ற போர்வையில் அசிங்கத்தை பரிசளிக்காதீர்கள்.
நாகரீகம் என்ற போர்வையில் நாய்களுக்கு எலும்புத்துண்டு போடாதீர்கள்....
0 Comments
Thank you