HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

சிறுகதை வலி

சிறுகதை
வலி

"ஏய்!சுசீலா டிபன் ரெடியா?"
"அம்மா!என் சாகஸ் எங்க?"
கணவன் மற்றும் மகனின் ஆணைக்கு ஏற்ப பம்பரமாய் 
சுழன்றுக் கொண்டிருந்தாள் சுசீ.
திருமணமான இருபத்தெட்டு
வருடங்களாக 'என் குடும்பம் 
இன்புற்றிருக்கவே அல்லாமல்
வேறொன்றும் அறியேன் பராபரமே'என வாழும் ஜீவன்.
அவளின் பெரிய மற்றும் சிறிய
நாத்தனார்களின் திருமணம்,
பிரசவம்,மச்சினர்களின் வீட்டு
விசேஷம்,கணவன் மற்றும்
மகன் அழைத்து வரும் திடீர் 
விருந்து விருந்தாளிகள் மற்றும்
வருடாந்திர மாமியார், மாமனார்
திவசம் என அளவுக்கு மீறி மாதவிடாய் தள்ளிப்போகும்  மாத்திரைகளை 
உட்கொண்டதன் வினை இப்போதெல்லாம் மிகவும் சோர்ந்துப் போனாள்.
அடிவயிற்றில் யாரோ ஊசியால் சுறுக்கென குத்துவதைப் போல் வலி.
டாக்டர் ருக்மணி"நிறைய 
மாத்திரை சாப்பிட்டதால  வெளியேறாத ரத்தப்போக்கு 
உங்க கர்ப்பபைல  கட்டிகளாயிருக்கு.உடனே உங்க
கர்ப்பை அகற்ற ஆப்ரேஷன்
செய்யணும்.அடுத்த மாதவிடாய்
வந்தா உங்க.உயிருக்கே ஆபத்து"என முடித்தாள்.
வீட்டு நபர்களின் முகம் இருண்டுப் போனது.
"சே! எல்லார் குடும்பத்து விசேஷத்துக்கும் ஒடி ஒடி செஞ்சே இப்போ என் கல்யாணம் போதா இப்படியாகணும் எல்லாம் என் தலையெழுத்து"என வெகுண்டான் அன்பு மகன்.
கணவனோ "சுசீ டாக்டரெல்லாம் அப்படித் தான்
பயமுறுத்துவாங்க.பையன் 
கல்யாணம் முடியட்டும்,என்
பாஸ் அவரு குடும்பத்தோடு
உன் சமையலை சாப்பிட 
பிரியப்பட்றார் ஆகட்டும் பிறகு 
உன் ஆப்ரேஷனைப் பாத்துக்கலாம்.அதுக்குள்ள நீ 
செத்திட மாட்டே"புண் மேல் 
அமிலம் ஊற்றும் சொற்கள்.
அடுத்தடுத்து வந்த நாட்களில்
சுசீயால் சுத்தமாக முடியவில்லை,அடிவயிற்றில்.
சுறுக் சுறுக் வலி,அதீத சோர்வு.
காலை அவள் எழ முடியாமல் 
தவித்தால் மகன் "அப்பா 
அம்மாவுக்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம் சூப்பர் நடிகை.
சீக்கிரம் ஆப்ரேஷன் செய்துக்க
என்னம்மா நடிக்கறா" பெற்ற 
வயிறைக் குத்திக் கிழிக்கும்
வார்த்தைகள்.அந்த சொற்களால் அவளின் உடல்
வலி வீரியம் குறைந்து விடும்.
சுசீ கணவனிடம் தான் தேறும்
வரை வீட்டோடு ஒரு வேலைக்காரியைப் போட சொல்லப் போக,வாலை கடித்த 
நாயாய் வள்ளினான் "உஙகப்பன் வீட்டிலிருந்தா அதுக்கு பணம் வரும் .கல்யாணம் ஆப்ரேஷன்னு எவ்வளவு செலவு தெரியுமா"
சுசீ விக்கித்துப் போனாள்.
'கடவுளே!அன்பாலும் பாசத்தாலும் இந்த குடும்பத்திற்கு நான் செய்ததை கணக்கிட்டால் அடுத்த ஜென்மத்திலும் கணக்கு
தீராதே!'
முன்பு அவள் உதவிநாடி வந்த உறவெல்லாம் இப்போது எங்கோ ஔிந்துக் கொண்டது.
சுசீக்கு தனது மாதவிடாய் 
முன் அறிகுறிகள் தெரிய பயந்து போனாள்.இனி புரியாத
இந்த ஜந்துக்களிடத்தில் சொல்லி பலனில்லை.அன்று
மாதவிடாய் தள்ளிப் போகும்
மாத்திரையை எடுத்த போது 
அவள் கைகள் நடுங்கின.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை.
சுசீ ஆறு மணிக்கு மேல் எழலாம் என்று நினைத்திருந்தாலும் எட்டு 
மணியாகியும் எழ முடியவில்லை. இப்போது அடிவயிற்றை யாரோ கோடாரியால் இடிப்பதை போன்ற வலி.கண்களை திறக்கவே முடியவில்லை.
 இளஞ்சூடான ஹார்லிக்ஸ்க்கு
அவளின் தொண்டை ஏங்கியது.
கணவனின் இரக்கமற்ற சொல்லால் வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.அவளின்
சிறுநீரில் சிறிது ரத்தம் வெளிப்பட நடுங்கிப் போனாள்.
'கடவுளே!இதென்ன நேற்று
தானே மாத்திரை சாப்பிட்டேன்.
அதுதான் ஆபத்தாகி விட்டதோ'
கண்கள் இருட்ட தடுமாறியபடி
காபி கலந்தாள்.உள்ளே வந்த
மகன் "அம்மா ப்ரெண்ஸ் என்
கல்யாணத்துக்கு ட்ரீட் கேட்டாங்க விருந்துக்கு வர
சொல்லியிருக்கேன்
ஜமாய்ச்சிடு என்ன"என்றான்.
'என்ன சொன்னாலும் செவிடன்
காதில் ஊதிய சங்கு தான்'
திடீரென ஐயோ!இதென்ன
ஆ!அடிவயற்றை கூரிய ஆயுதத்தால் பிளக்கும் வலி!
பிரசவத்தை விட இரு மடங்கு 
வலியால் "ஐயோ அம்மா"என 
சுருண்டு விழ,ரத்தப்போக்கு 
கட்டிகளாக வெளிப்பட,சுசீயின்
கண்கள் நிலைக்குத்தின.
டாக்டர் "இறந்து பத்து நிமிஷமாச்சு"என்றார்.
வலியிலிருந்து சுசீக்கு விடுதலை கிடைத்துவிட்டது ஆனால் அவளின் 
குடுமபத்தாருக்கு  அப்போது தான் வலி தொடங்கியது.

Post a Comment

0 Comments