#இதயம் #கனத்த #இரவு
வேலைமுடிந்து
வீடு வருகின்றேன்
மாலை மயங்கிறது.
மங்கிறது பார்வை.
இலைகள்
பழுத்து விழுந்து
படர்ந்திருக்கின்றது
வீதியின் இரு மருங்கிலும்...
பொலித்தீன் பையில் சிறு
பொட்டளம் ஒன்று..
வெற்றுப்பையென்று யாரும் வீசியிருக்கலாம்
யூசி வாகனம் வருவது குறைய அதனால்
ஓசியில் இங்குதான் கொட்டுவது நிறைய
வேண்டாத காகிதமென்று திரட்டி யாரும் இவ்
வீதியில் போட்டிருக்கலாம்.
எப்படி இருந்தால் எனக்கென்ன என்று எடுத்து பார்த்தேன்
பத்திரிகைச்சரையில்
பலதடவை சுற்றிய பணம்
எண்ணிப்பார்த்தேன்
எண்ணாயிரம் ரூபா..
கொத்து ரொட்டியும் கோக் கும் வாங்கி
குதூகலிக்கலாமா? அல்ல
சொத்தாக எண்ணி வங்கியில் வைப்பிலிடவா? என்று விவாதித்தது மூளை
தொலைத்தவன் எவ்வளவு துன்பப்படுவானோ?
எது என்றாலும்
இரண்டு நாளாவது பார் என்றது மனது
மூளைக்கும் மனதுக்கும்
மும்முனை யுத்தம்
மனம் சொன்னதை கேட்பதாய்
மவுனித்தது மூளை
குளித்து கழுவி கும்பிட்டு விட்டு
கடைக்கு போக கால் நடையாய் புறப்பட்டேன்
அடர்ந்த முன்னிருட்டு அதில்
ஆரோ ஒரு பெண்
மின்கல வெளிச்சத்தில்
வெதும்பிய படி..
என்ன என்றேன்
ஐயோ தம்பி!
பிள்ளைக்கு வருத்தம் வோட்டில
பென்ரனை அடைவு வைச்ச காச
பேசில வைச்சனான்- இடையில
பிறிட்டோன் சிறப்பும் வாங்கினான்.
வந்து பார்த்தேன் காணல என்றார்
வாயடைத்து நின்றேன்.
எவ்வளவம்மா என்றேன்
எண்ணாயிரத்தில்
இந்த மருந்து போக மீதி என்றாள்
எண்ணிப்பாருங்கள் சரியா? என்று என்றேன்
சாகலாம் என்றிருந்தேன்
சாமி போல வந்தாய் தம்பி
ஆயுள் நூறு வாழனும் என்றாள்..
இதயம் கனத்த
இரவானது அன்று...
0 Comments
Thank you